தோழர் தியாகு எழுதுகிறார் 197 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 3/4 + தொடர்ச்சி) இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4 இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலை பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்பட வில்லை. கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! 2/4 – தொடர்ச்சி) இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4 புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?இவை காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாசக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 சஎதச(ஊபா) வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான சஎதச(ஊபா) வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகக் காரணத்திற்கே பிரிவு 18 பயன்படுத்தப்படுகின்றது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.)…

தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4 – தொடர்ச்சி) இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4 இதைக் கண்டித்து மதுரை வழக்கர் சங்கம்(பார் அசோசியேசன்), தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே கொண்டுவர வேண்டும்; வழக்கறிஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டித்துத் தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4

(தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தேசியப் புலனாய்வு முகமையையும் சஎதச(ஊபா) சட்டத்தையும் கண்டித்து அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையை தாழி (216) மடலில் வெளியிட்டிருந்தோம். இவ்வறிக்கை மேலும் செப்பம் செய்யப்பெற்று மீண்டும் வெளியிடப்படுகிறது. தெளிவு பெறுங்கள். பிறரையும் தெளிவு பெறச் செய்யுங்கள். ++++ இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா)வின் கீழ்ப்பொய் வழக்கு!அரசவன்முறையின்(பாசிசத்தின்) வன்முறை நிறுவனமாய்த் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!அரசவன்முறையின்பாசிசத்தின் அடக்குமுறைக் கருவியாய் சஎதச(ஊபா)!மோடி அரசின் அரச பங்கரவாதத்தை முறியடிப்போம்! தமிழ்நாட்டில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நடத்திய…

தோழர் தியாகு எழுதுகிறார் 108: இசுலாமியர் தொடர்பான உரையாடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 107 : ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இசுலாமியர் தொடர்பான உரையாடல் தொடர்கிறது. நலங்கிள்ளி ஓர் ஐயம் தெரிவித்திருந்தார் (தாழி மடல் 69): சங் பரிவார் இசுலாமியர்களை எதிர்க்கிறார்கள், உண்மைதான். ஆனால் அந்த எதிர்ப்பில் ஓர் ஐந்து விழுக்காடு அளவுக்குக் கூட கிறித்துவர்கள் மீது காட்டுவது இல்லையே, ஏன்? மசூதிகளைக் குறிவைக்கும் கடப்பாரைகள் தேவாலயங்களைக் குறி வைப்பதில்லையே, ஏன்? நலங்கிள்ளியின் வினாவுக்கு விடையளிக்க முற்பட்ட நான்“எனக்குத் தோன்றும் காரணங்கள்” என்று 6…

துலுக்கப்பயலே! 7 -வைகை அனிசு

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி)  7    துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள்   தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள்…

தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு

தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.) சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள்,…