திருவரங்கம்: அ.தி.மு.க.விற்கு ஆதரவு – ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு
திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி,…
திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை
திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…
திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்
திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…
திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்
திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர். செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில்…
தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்
தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம் தேவதானப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டியில் சாவெடு தொண்டு நிறுவனமும் தேனி அரவிந்து கண்மருத்துவமனையும் இணைந்து கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியன. இதில் கண்ணில் ஏற்படும் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் ஒழுகுதல், மாலைக்கண்நோய், கண்கூசுதல், கண்ணில் சீழ் வடிதல் முதலான பல்வேறு வகையான நோய்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி மருந்துகளும், மருத்துவப் பண்டுவம் தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவப் பண்டுவமும் அளிக்கப்பட்டது. …
கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்
தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சித்தரரேவு, தாண்டிக்குடி வழியாக ஒரு வழியும், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதை மற்றொரு பாதையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனைப்பயன்படுத்தித் தனியார் பேருந்துகள், தாண்டிக்குடி வழியாகச் செல்கின்ற பேருந்துகள், கொடைக்கானலுக்கு 100 உரூபாயும் பழனி வழியாகச் சுற்றி வருகின்ற வாகனங்கள் 150உரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். ஏற்கெனவே சரக்குச்சிற்றுந்துகள், சிற்றுந்துகள் கொடைக்கானலுக்கு 50உரூபாய் கட்டணம் பெற்றன. தற்பொழுது…
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை – தொகுதி வாரியாக
வடசென்னை 40 தென்சென்னை 42 மத்திய சென்னை 20 திருப்பெரும்புதூர் 21 காஞ்சிபுரம் 11 அரக்கோணம் 24 வேலூர் 24 கிருட்டிணகிரி 24 திருவண்ணாமலை 24 ஆரணி 19 சேலம் 25 நாமக்கல் 26 திருப்பூர் 26 நீலகிரி 10 கோவை 25 திண்டுக்கல் 18 கரூர் 25 திருச்சி 29 பெரம்பலூர் 21 கடலூர் 17 சிதம்பரம் 15 நாகை 9 தஞ்சை 12 சிவகங்கை 27 மதுரை 31 தேனி 23 விருதுநகர் 26 இராமநாதபுரம் 31 தூத்துக்குடி 14 தென்காசி…