இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

  நிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும்.  அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும்  முயன்றால்  தவறான  பாதையில் செல்லும் நாட்டின் போக்கைத் திருப்ப இயலும். அதற்காக அவர்கள் முன் இரு  வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செயல்படுத்தினால் போதும்.   முதல் வழி தேர்தல் பரப்புரை…

நன்கறிந்து எழுதுக!

  இணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும் உள்ளது;  தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத்  தொலைக்கும் தீய உருவாய் விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப் பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக்  கொண்டு மனம் போன போக்கில் எழுதுவதை நிறுத்த வேண்டும். “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்பதை உணராமல்  முற்றும் அறிந்த முனைவராகக் கருதுவது ஏனோ? ஏதேனும் சிறிதளவு அறிந்திருந்தாலும் முற்றும் முழுமையாக அறிந்தது போலும்,  தாம் அறிந்ததே அல்லது அறிந்ததாய் எண்ணி்க்…

தமிழ்ப்புலமை பெறுங்கள்! அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்!

பிற துறை  தமிழன்பர்களே! தமிழ்ப்புலமை பெறுங்கள்! அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்!   “தொண்டு செய்வாய் தமிழுக்கு! துறைதோறும்,  துறைதோறும் துடித்தெழுந்தே!” எனப் பாவேந்தர் வேண்டியவாறு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் தொண்டாற்றி வருகின்றனர். தாங்கள் சார்ந்த துறைகளில் தமிழ்ப்பயன்பாடு பெருகவும் உழைத்து வருகின்றனர். எனினும் இத்தகையோருள் பெரும்பான்மையர் தங்களின் தமிழார்வமும் தங்கள் தமிழ்த் தொண்டும் தங்களின் தமிழ்ப்புலமைக்கு அளவுகோல் எனத் தவறாகக் கருதுகின்றனர். கற்றது கைம்மண் அளவு என்பதை மறந்து விட்டுத் தங்களுக்குத் தெரிந்த அளவு தமிழையே உயர்ந்த அளவாகக் கருதிவிடுகின்றனர். எனவே, சொல்லாக்கங்கள், தமிழ்…

எழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்! சட்ட எதிர்ப்பர், எதிர்ப்பர்!

  இராசீவு  கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகச் சிக்க வைக்கப்பட்ட எழுவரின் மரணத் தண்டனை வாணாள் தண்டனையாக மாற்றப்பட்டு விடுதலையும் அறிவிக்கப்பட்ட சூழலில் காங். அரசு இடைக்காலத் தடை பெற்றுள்ளது.   எழுவரின் உடனடி விடுதலையை உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் வரவேற்கின்றனர். விடுதலைக்கான தடைக்கு எதிராக அறவழிகளில் போராடி வருகின்றனர். அதே நேரம் தலைமைக்குக் கால்கை பிடிப்பதுபோல் போக்குகாட்டும் போலிகள் எதிர்த்து வருகின்றனர்.   விடுதலையை முழுமனத்துடன் வேண்டி ஆதரிப்போர் ஒருபுறம் இருக்க, ஒரு சாரார் காலங்கடந்த முடிவு என்றும்…

எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?

   இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார்,  இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா  விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார்.   உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும்  வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள்  எவையாயிருப்பினும்…

பொள்ளாச்சியார் திருந்தமாட்டாரா? தமிழ்க்கொலையை நிறுத்த மாட்டாரா?

    பொள்ளாச்சியார், வள்ளலார்  கொள்கையைப் பரப்பும் அருள் உள்ளம் கொண்டவர். ஆனால், தமிழ்த்தாய்மீது அருள் இல்லாதவர்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நெறி பரப்புபவர், அயல்மொழிகளால் வதைக்கப்பட்டு வாடும் தமிழன்னை மீது  பரிவு காட்ட வேண்டாவா?  மாறாகத் தமிழைப் பாராட்டி ஆரியத்தை முன் நிறுத்துவதையே கொள்கையாகக் கொண்டவர். ஆரியத்தை அடைவதற்குரிய பாதைதான் தமிழ் என்பது அவரது வழிமுறை. தமிழ்க் கோப்பையில் ஆரிய நஞ்சு தருவதில் வல்லவர். எனவே, அவரிடம் இதனை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால், அவரின் நெருங்கிய வட்டம் தமிழ் எழுத்துவடிவங்களைச்…

கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்!

  கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள்  கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான  படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது  இவ்வாறு கூற நேர்கிறது!   உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும்   தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய…

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…

புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்

  திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.   தமிழ் ஈழம்  தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!   நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…

தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை

  தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று  போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான்  அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர்  வேறு எங்கும் சொந்த   வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…

தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!

இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும்  தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர்.  அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும்  பிற மொழி பேசுவோர் தம்…

மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!

  இதழுரை   முதுமையில் இறந்திருந்தாலும்  நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும்  ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது.   எதனால் அவர் நலங்குன்றிப் போனார்? இன மக்களுக்காக ஏற்ற  சிறைவாழ்க்கைதானே காரணம்?  சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார்! இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா? எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால்  பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள்  எனலாம்….