சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!
மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…
தமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்!
தமிழ் மக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது முறையான வேண்டுகோளே! ஆனால், திரைத்துரையினர் பலரும் இதற்கு மாறாகப் பிற மொழிகளில் தமிழ்ப்படங்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர். அடித்தளம், அரண்மனை, உ, உயிருக்கு உயிராக, எதிர்நீச்சல், களவாடிய பொழுதுகள், கோச்சடையான், கோவலனின் காதலி, சித்திரை திங்கள், சுற்றுலா, திருப்புகழ், நினைவில் நின்றவள், நெடுஞ்சாலை, நேர் எதிர், புலிவால், மாதவனும் மலர்விழியும், மாலை நேரப் பூக்கள், முறியடி, முன் அந்திச் சாரல், விடியல், விரட்டு, வெற்றி கொண்டான் எனத்…
அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!
அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில் இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…
சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்
கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு 2013ஆம் ஆண்டிற்கான சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருது மணி மு. மணிவண்ணனனுக்கு வழங்கியுள்ளது. இதற்கான விழா கனடாவில் அன்று நடைபெற்றது. முத்து நெடுமாறன், கல்யாணசுந்தரம், முகுந்து சுப்பிரமணியன், வாசுஅரங்கநாதன் ஆகியோர் வரிசையில் கடந்த ஆண்டிற்கான விருதினை மணி மு. மணிவண்ணன் பெற்றுள்ளார். புழைக்கடைப் பக்கம் சொல்வளம் – உங்கள் தமிழ்ச் சொல் திறனறிதல் தமிழ் எழுத்துச் சீர்மை முதலான இவரின் வலைத்தளங்களும் இவரின் முகநூல் பக்கங்களும் இவரது…
அறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே!
முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன், பொறியாளர்கள், கணித்தமிழாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வகையினராலும் உலக அளவில் நன்கு அறியப்பெற்ற ஆன்றோர் ஆவார். கட்டடப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொலை உணரியல், தகவல் தொழில் நுட்பம், அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை பகுப்பாய்வு, மேம்பாட்டு குறிகாட்டிகள், தொழில்நுட்பப் பன்னாட்டு மாற்றங்கள், சிறு, குறு தொழிலகங்கள், கல்வியகங்களின் மேலாண்மை, சிறார் அறிவியல் கல்வி எனப் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்த அறிவு கொண்ட அறிஞர் முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன் 1952 ஆம் ஆண்டு, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்)…
ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க…
வண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே!
நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால், பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர். (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர். இதன் சார்பில் 1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும்…
மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.
மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும் தமிழக முதல்வர் (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர் முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…
மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக
சூன் 3 ஆம் நாள் இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும். மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…
நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!
மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான். அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…
பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்!
உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ், இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம், தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும்…
தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்!
தமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப. (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்! தமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் பாடுபட வாழ்த்துகிறோம்! கல்வியகங்களில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தமிழர்க்கான தமிழர்களின் கோயில்களில் தமிழே வழிபடுமொழியாக இருக்க வேண்டும்! தமிழில் பிற மொழி…