இறந்தது நெல்லை இற்றதோ மனமே! – த.கு.கருணாநிதி
இறந்தது நெல்லை இற்றதோ மனமே! இறந்தது நெல்லை இற்றதோ மனமே துறந்தது உடலை தூயரோ கண்ணன்; சற்றைப் போதில் சடுதியில் பறித்தாய்! சரிந்தது தமிழே! சாய்ந்தது சரிதம்! பாவியாம் காலன் பறித்தான் உயிரை! மேவிய புகழுடை மேதினிப் புலவ! நெல்லை கண்ணா நெருநல் இருந்தாய்! புல்லென எண்ணி நெல்லைப் பறித்தான். அற்புதப் பேச்சினில் அறிவாம் சுடரைக் கற்பொதும் பிலும்தீச் சுடர்ஏற் றிடுவாய்! ஒப்பா ரில்லை மிக்கா ரில்லை. தப்பே…
பாரிமகளிர் இரங்கற்பாவும் வீரயுக இலக்கியமும் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69 இன் தொடர்ச்சி)
அருள் வேந்தரே! மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்! – அர.விவேகானந்தன்
தொழுகிறோம் உம்மை! – ஆற்காடு.க.குமரன்
தொழுகிறோம் உம்மை! ஆலமரத்தின் ஆணிவேர் சலசலப்பின்றி இலைகள் இமயம் சரிந்து இரு விழிகளில் நதியாய் இதழினிலுதிரும் இரங்கலும் ஈரமாய் நீர்…..தூரமாய்….. கலங்கரை விளக்கு விளக்கியதில் துலங்கிய கழகம் கலங்கி நூலகத்தில் தவங்கிடக்கும் நன்னூல்…..நின் முனை என்னகத்தில் பேராசிரியர் பேராண்மை மிக்க ஆசிரியர் உம்மைக் கண்டு ஆ……என அண்ணாந்து வியந்த சிறியர் யாம் தொன்னூற்று எட்டு வரை தொண்டு போதுமென துயிலிலாழ்ந்தீரோ! துணையினி யாரோ! நேரில் காணாமலே வேரில் நீர் வேறில்லை என்னில் ஈடில்லை மண்ணில் பொதுச்செயலாளர் பொதுவாகிப்போனீரோ தொடர்ந்து தொண்டாற்ற தொழுகிறோம் உம்மை! துணையாய்,…
இசை முரசு நின்றது! இரங்கற்பா!
நாகூர் தேன்குரல் அனிபா (HONEYபா!) – (உ)ருத்ரா “அழைக்கின்றார் அண்ணா” என்ற கணீர் தேன்குரலில் திராவிடக் கீதம் யாழ் மீட்டிய மா மனிதர் திரு நாகூர் அனிபா மறைந்ததற்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனைப்பாடல்கள்? அந்தக் குரல் சுவடுகளுக்கு இறைவனின் கையெழுத்தும் போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு. “இறைவனிடம் கையேந்துங்கள்” என்று மக்கள் முன் உருகி வழிந்தார். காசுகள் குலுங்கும் ஒலிபோல அந்த கைப்பறையின் ஒலியில் ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது. அனி{ ‘HONEY’)பா அவர்களின் தேன்குரலில் தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை இந்தத் தமிழ்…
கூற்றே உண்மை கூறு!
அன்னைத் தமிழை அரியிருக்கை அமர்த்த வுழைத்த அடலேற்றை முன்னே நுழைத்த மூடமெலாம் முறிக்க இசைத்த முறையூற்றைப், பொன்னை நிகர்பா புரிந்திசையார் புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச், சென்னை நகரில் சிறையெடுத்துச் சென்ற தேனோ சிறு கூற்றே? – காரை. இறையடியான் – குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964
பாரதிதாசர்க்கு இரங்கற்பா
ஒப்பில் புலவர் உயர்வில் கலைஞர் இப்புவி கண்ட எதிரிலா வலத்தினர் தமிழ்த்தாய் புதல்வர் தனித்தமிழ்க் காவலர் தாழ்த்தாத் தலையர் தளரா நெஞ்சினர் பாரதி தாசர் பான்மை பலப்பல பாரும் அறியும் ஊரும் உணரும் இத்தகு சிறப்பில் ஏமமுறு கவிஞர் கத்தவே எம்மைப் பிரிந்தது என்கொல்? தமிழர் உணர்வறைப் போயது கண்டோ? தமிழ்மொழி தமிழகத்தில் தளர்வற உணர்ந்தோ? இந்திக் கிங்கே இடம் வரக் கண்டோ? எதனால் புத்தேன் உலகம் புக்கார்? எல்லாம் தெள்ளிதின் உணரும் இறையே எமக்குச் செய்க உரையே. – க.தி.நாகராசன் – குறள்நெறி:…
கவிக்குயில் எங்கே – நாகை சு.இளவழகன்
புயல்போல பாட்டெழுதிச் சுழல வைத்தப் புதுச்சேரிக் கவிக்குயிலே பறந்ததெங்கே? இயற்கையெனும் கொடும்பாவிக் குரலைக் கேட்டோ எழுந்தெம்மைப் பிரிந்தே நீ சென்றுவிட்டாய் திரும்பாத பெரும்பயணம் சென்ற ஐயா திருநாட்டை மறந்தாயோ? என்று காண்போம். அரும்பிவரும் தமிழுலகின் பொற்காலத்தை அருகிருந்து பாராமல் எங்கே சென்றாய்? அழுகின்ற எங்களையார் ஆற்ற வல்லார்? அடுத்த பல தலைமுறைக்கும் வீர மூட்டித் தொழுகின்ற நிலைபெற்றாய்; உன்னை இந்தத் தொல்லுலகில் இனியென்று காண்போம் ஐயா பாரதிக்கு தாசனென எழுந்த நீயோ பைந்தமிழின் எதிரிகளை ஒடுக்கி வைத்தாய் பாரதிரத் தமிழ்பாடி வந்தாய், இன்றோ பாட்டெல்லாம்…
வெண்முகிலே! நில்மின், செல்மின்! – புதுகை மா.நாகூரான்
1.வெண்முகிலே! வேகங்குறைமின், நில்மின் நில்மின் வேதனையால் கூறுகின்றேன் கேன்மின் கேன்மின் ஒண்கவிதை தந்திட்ட எந்தண் மூத்தோன் ஒளிர்கின்ற உன்னுலகில் உலவி வந்தான் மண்ணுலகில் அதனினைவாய் அலைக்கப்பட்டு மன்றாடும் என்செயலை அவர்க்குச் சொல்வி விண்ணுலகை விட்டுவிட்டு இங்கே வந்து விழிப்புள்ள என்னில்லில் வாழச் சொல்லேன். 2. மொழியென்றால் வேம்பென்று வாழ்ந்து சாகும் விழிகெட்ட வீணர்க்கு அறிவை யூட்ட மொழிக்கென்று வாழ்ந்து இறந்த மூத்தோர் தம்மை வழிகேட்க மாண்டாயோ? அன்றி யிந்த மொழிக்காக செய்ததெல்லாம் வீணே என்று மொழிப்பற்றை விட்டுவிட்டு விழியை மூடி மொழியாது ஓய்வெடுக்க…
நெஞ்சில் வாழ்க நிலைத்து – மு.வில்லவன்
தனிச்சொல் தமிழ்ச் சொல்லைச் சேர்த்தொன்றாய்ப் பாடி கனிச்சுவை ஈந்த தலைவா – கனி சுவைத்த நற்றமிழர் நெஞ்சினில் நீங்காது நீவாழ்ந்து இற்றரையில் வாழ்க இனிது. தட்டி எழுப்பி தமிழுர்வு ஊட்டி வந்(து) எட்டி நீ சென்றாய் கவித்தலைவா! – விட்டின்று சென்றாலும் உன் கவிதைப் பார்க்கும் தமிழ் நெஞ்சில் என்றென்றும் வாழ்க இனிது. மொழி வாழ்ந்தால் வாழ்வுண்டு நற்றமிழர்க்கும்; பாரில் மொழியழிந்தால் வாழ்வில்லை காண்பீர் – விழிபோன்று காப்பீர் எனவுரைத்த பாவேந்தர்! நின்வழியை காப்பவர் நெஞ்சில் புகு. வண்டமிழர்…
குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன்
1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா! குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா! பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா! பறையின்றி நடைபோடும் படையே அம்மா! உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா! ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா! பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ! 2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள் நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச் செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்? செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக் கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும் குலையாமல் தளராமல் தமிழைக் காத்த அஞ்சாத அடலேற்றைப் புலியின் போத்தை, அருந்தமிழை, ஆரமிழ்தை இழந்தோம்…
கண்ணீர்ப் பெருக்கினைக் காண் – கவிஞர் முத்தன்
கத்து கடல்சூழ் புதுவைக் கருங்குயிலே! புத்தமுதப் பாடற் பொழிவாய் நீ – இத்தரையில் மொத்த புகழ் ஒத்தவிசை எத்தனையோ அத்தனையும் நத்திச் சுவைத்தாய் நன்று. பாடும் இசைக்குயிலே. பாரதி தாசனே! தேடு சுவைபடைத்த தேன்பொழிலே! கூடு துறந்து தமிழ்ச்சோலை சுற்றறுத் தேனோ பறந்தாய் மறைந்தாய் பகர்! கானக்குயிலே! கனித்தமிழின் இன்சுவையே மோனப் பெருந்துயிலின் மூழ்கியதேன்? -ஞானத் திருவிளக்கே பாவுலகில் தேடினும் உன்போல் ஒருவிளக் குண்டோவுரை! பாட்டுத் திறத்தாலே பைந்தமிழைக் காக்கும் – மாங் காட்டுக் குயிலரசே! காதலினால் – நாட்டிலுறு கேடுகளைப் போக்கக்…