ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்   3

(ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்  2- தொடர்ச்சி) ஊரும் பேரும் கோயிலும் வாயிலும்   3 திருமுல்லைவாயில்      காவிரி யாற்றின் வட கரையில் கடலருகே யுள்ளது திருமுல்லை வாயில்.22 அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது.         “வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து         மிளிர்கின்ற பொன்னி வடபால்         திரைவந்து வந்து செறிதேறல் ஆடு         திருமுல்லை வாயில் இதுவே” என்னும் திருப் பாட்டில் கடற்கரையி லமைந்த முல்லை வாயிலின் கோலம் நன்கு விளங்குகின்றது. அங்குக் கோயில் கொண்டுள்ள…

ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 2

(ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் கோயிலும் வாயிலும் 2 இளங்கோயில் தொடர்ச்சி    சித்தூர் நாட்டில் இக் காலத்தில் திருச்சானூர் என வழங்கும் ஊரில் ஈசனார் அமர்ந்தருளும் இடம்  இளங்கோயில் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவேங்கடக் கோட்டத்துக் கடவூர் நாட்டுத் திருச்சொகினூரில் உள்ள இளங்கோயிற் பெருமான் என்பது சாசன வாசகம்.9 இவ்வூரின் பெயர் திருச்சுகனூர் என்றும், சித்திரதானூர் என்றும் சிதைந்து வழங்கும்.10  ஆலக்கோயில்      தொண்டை நாட்டில் ஆலக்கோயில் எனச் சிறந்து விளங்கும்ஆலயங்கள் இரண்டு…

ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும்

(ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தலமும் கோவிலும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 46 கோயிலும் வாயிலும் மாடக்கோயில்     தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன. அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார்.1…

ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும்

(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும்   தொடர்ச்சி) ஊரும் பேரும் 45 தலமும் கோவிலும் கருவூர்-ஆனிலை     பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி…

ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை) : மாடமும் மயானமும்

(ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 44 மாடமும் மயானமும்     மாடம் என்னும் பெயர் அமைந்த இரண்டு திருக்கோயில்கள் தேவாரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கடந்தையென்னும் பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்,       “கடந்தைத் தடங் கோயில் சேர்       தூங்கானை மாடம் தொழுமின்கனே” என்று தேவாரம் அம் மாடத்தைப் போற்றுகின்றது. இன்னும், ஆக்கூரில் உள்ள சுயம்பு வடிவான ஈசன் திருக்கோவில் தான் தோன்றி மாடம் என்னும் பெயர் பெற்றது. முன்னாளில் அறத்தால் மேம்பட்டிருந்த ஊர்களில்…

ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்

(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும்     துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம்     தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…

ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி

(ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி கடம்பந்துறை சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா்….

ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும்

(ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன. “கயிலாய மலையெடுத்தான் கரங்களோடுசிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறைபண்டெழுவர் தவத்துறை வெண்துறை”. என்று பாடினார் திருநாவுக்கரசர். திருப்பராய்த்துறை காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 39 – மலையும் குன்றும் – தொடர்ச்சி

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும் தொடர்ச்சி) மலையும் குன்றும் – தொடர்ச்சி காளத்தி மலை     தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12 “கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடும்” காளத்தி மலையைக்கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13  திருவாட் போக்கி மலை     திருச்சி நாட்டுக்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி) மலையும் குன்றும் திருவண்ணாமலை      ஈசனார் கோவில் கொண்டு விளங்கும் திருமலைகளைத் தொகுத்துரைத்தார் திருஞான சம்பந்தர்:         “அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறகலா         முதுகுன்றம் கொடுங்குன்றமும்” என்றெடுத்த தேவாரத்தில் அமைந்த அண்ணாமலை வட ஆர்க்காட்டிற் சிறந்து திகழும் திருவண்ணாமலையாகும். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன்  அரும் பெருங் சோதியாகக் காட்சி தரும் திருமலை, அண்ணாமலை என்பர்.1 திருஈங்கோய் மலை      திருச்சி நாட்டைச் சேர்ந்தது ஈங்கோய் மலை. அங்கு எழுந்தருளிய இறைவனை…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 – தேவும் தலமும் தொடர்ச்சி) தேவும் தலமும் தொடர்ச்சி தலையாலங்காடு    தேவாரப் பாமாலை பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். அது சங்க இலக்கியங்களில் தலையாலங்கானம் என்று குறிக்கப் படுகின்றது. அப் பதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், ஏனையதமிழ் வேந்தர் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்ததென்றும், அப்போரில் பாண்டியன் பெற்ற வெற்றியின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் என்னும் பட்டம் பெற்றான் என்றும் பண்டைய இலக்கியம் கூறும். இத்தகைய ஆலங்காட்டைத் திருநாவுக்கரசர் பாடியருளினார்.16  சாய்க்காடு…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 –   தேவும் தலமும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 –   ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் தொடர்ச்சி)     5. தேவும் தலமும்     தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு. பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவனோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?     பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய…