ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 – தேவும் தலமும் தொடர்ச்சி) தேவும் தலமும் தொடர்ச்சி தலையாலங்காடு    தேவாரப் பாமாலை பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். அது சங்க இலக்கியங்களில் தலையாலங்கானம் என்று குறிக்கப் படுகின்றது. அப் பதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும், ஏனையதமிழ் வேந்தர் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்ததென்றும், அப்போரில் பாண்டியன் பெற்ற வெற்றியின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் என்னும் பட்டம் பெற்றான் என்றும் பண்டைய இலக்கியம் கூறும். இத்தகைய ஆலங்காட்டைத் திருநாவுக்கரசர் பாடியருளினார்.16  சாய்க்காடு…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 –   தேவும் தலமும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 –   ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் தொடர்ச்சி)     5. தேவும் தலமும்     தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு. பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவனோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?     பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 –   ஆட்பெயரும் ஊர்ப்பெயரும்

( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34 தொடர்ச்சி) ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் கீரன்     பழந் தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன், ஆதன் முதலியபெயர்கள் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களிற் கலந்துள்ளன. கீரன் என்னும்பழம் பெயருக்கு பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது.கீரனூர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில்உண்டு.  ஆதன்     ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப்பேசப்படுகின்றது. இளங்கோவடிகளின் தந்தை சேரலாதன் என்றுகுறிக்கப்படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ்நாட்டிற் காணப்படும்.  கோடன்    கோடன் என்னும்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34: புலவரும் ஊர்ப்பெயரும்

( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 தொடர்ச்சி) புலவரும் ஊர்ப்பெயரும் புலவரும் ஊர்ப்பெயரும்      சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும். பொதும்பிற் புலவர்     பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 . சான்றோரும் ஊர்ப்பெயரும்

                  ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி)  சான்றோரும் ஊர்ப்பெயரும்       தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன. நாவீறுடையார்       நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33. சான்றோரும் ஊர்ப்பெயரும்

  ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி)                சான்றோரும் ஊர்ப்பெயரும்       தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன. நாவீறுடையார்       நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப் பெற்ற…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32- மகமதியரும் கிருத்துவரும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)                    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 மகமதியரும் கிருத்துவரும் வாலாசா     தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31- குறுநில மன்னர்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 30. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31 குறுநில மன்னர் பாரி      தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பாண்டி நாட்டிற் குறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான். அவ்வள்ளலுக்குரிய…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 – குலமும் கோவும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 29. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 4. குலமும் கோவும் தொடர்ச்சி சாமந்தர்     இன்னும் செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில் திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஊர்ப் பெயராக வழங்கும் மானாமதி என்பது வானவன் மாதேவியின் சிதைவாகும். இராசேந்திர சோழன் காலத்தில், அவ்வூரில் திருக்கயிலாயநாதர் கோயில் எழுந்தது. அதன் அருகே காணப்படுகின்ற அகரம் என்னும் ஊரும் அம் மன்னனால் உண்டாக்கப்பட்டதே…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 28. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29 குலமும் கோவும் தொடர்ச்சி கங்கைகொண்ட சோழன்     இராசேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.103 கடாரம் கொண்டான்     கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இாசேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு மாயவரம்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28   4. குலமும் கோவும் தொடர்ச்சி சனநாத சோழன்     இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.        “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்        அடிதழீஇ நிற்கும் உலகு” என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):27  4. குலமும் கோவும் தொடர்ச்சி சுந்தர சோழன்     அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபும் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு                             விளங்குகின்றன. இம்மன்னனைப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன்…

1 3 4 5 7