இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05 நாடும் நகரங்களும்    இயற்கை யெல்லைகளால் பிரிக்கப்பட்டுத் தமக்கென ஒரு மொழியைக் கொண்டு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ‘நாடு’ என்று அழைத்தனர் தமிழக முன்னோர். அப் பகுதி அங்கு வழங்கும் மொழியால் வேறுபடுத்தி அழைக்கப்பட்டது.  ‘தமிழ்’வழங்கும் பகுதி ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு, மொழியை யடுத்தே நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை உலகெங்கும் காணலாம். தமிழ்நாடு ‘தமிழகம்’ எனவும்,  ‘தமிழ்கூறும் நல்லுலகம்’எனவும் சுட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் கூறும்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை,  பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 –  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 முன்னுரை   `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்   அ.  முகவுரை, பதிப்புரை முகவுரை   இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.   தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது. வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7   “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்;  தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 1.6 படையல் கவிதைகள்   தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர்.   விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர்.   அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’…

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலை நாட்டப்படும் உண்மையாக உள்ளது. … மண்ணிற் புதையுண்டு மறைந்த ‘ஆரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ நகரங்கள் வழங்கிய மொழி ‘தமிழே’ என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ்வுண்மையை வலியுறுத்தும். – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)