தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால்
(தோழர் தியாகு எழுதுகிறார் 124: நம்ப முடியுமா? தொடர்ச்சி) நாற்றங்கால் தாழி நூறு கண்டதை ஒட்டி வாழ்த்துக் கூறியுள்ளார் அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன்: நூறாவது மடல் பன்னூறாயிரமாகத் தொடர வாழ்த்துகள். 0 நன்றி அன்பரே! தொடர்ந்து 100 நாள் – ஒருநாள் கூட விடாமல் தாழி மடல் எழுதியுள்ளேன். தொடங்கும் போதே எடுத்துக் கொண்ட உறுதிதான்: என் இறுதி நாள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். ஒருசிலர் மட்டும்தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு சிலர் படிக்க நேரமில்லை என்கின்றனர். பிறகு படிப்பதற்காகச் சேர்த்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 62
(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி) தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல் பாராட்டே அவமானம்? இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது. அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)
(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (7) அன்பர் சிபி எழுதுகின்றார்:ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன். சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது…
தோழர் தியாகு எழுதுகிறார் 42: சொல்லடிப்போம் வாங்க! (3)
(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (3) தாராளியமா? தாராளவியமா? தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்: தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமா? மேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது. ************************* சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன்….
ஒலி பெயர்ப்புச் சொற்கள் 376-404 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஒலி பெயர்ப்புச் சொற்கள் 301-375 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஒலி பெயர்ப்புச் சொற்கள் 226-300 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஒலி பெயர்ப்புச் சொற்கள் 151-225 : இலக்குவனார் திருவள்ளுவன்
நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்! கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. (நாலடியார் பாடல் 25) பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை)…
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…
நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு!, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு! வெறியயர் வெங் களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி யறிவுடை யாளர்க ணில் பொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை. சொல் விளக்கம்: வெறி=வெறியாடுதலை; அயர்=செய்கின்ற; வெம்=கொடிய; களத்து=பலிக்களத்தில்; வேல்மகன்=பூசாரி; பாணி=கையில், முறி=தளிர்; ஆர்= நிறைந்த; நறும்=மணக்கும்;…
தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்
வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 தலைமை: த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர் முழக்கம் எழுப்பல் – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி