வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 இன் தொடர்ச்சி)    வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 (குறள்நெறி) 31. அற வழியில் சிறப்பும் செல்வமும் பெறு! 32. அறத்தை ஆக்கமாகக் கருது! அதனை மறந்து கேடுஉறாதே! 33. இயன்றவழியில் எல்லாம் அறம் செய்க! 34. அறவாழ்விற்கு மனமாசின்றி இரு! 35. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்! 36. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்! 37. வெகுளியைப் போக்கி அறநெறியில் நில்! 38. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்று! 39. அறத்தினை அன்றன்றே ஆற்று! 40. …

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்   ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்   திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!  ‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள். கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம்,…

உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு

உலகத்திருக்குறள் மையம் திருவள்ளுவர் திருநாள் விழா உயராய்வு எழுச்சி மாநாடு தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 காலை 7.00 முதல் மாலை 5.00 வரை வள்ளுவர்  கோட்டம், சென்னை காலை 7.00 திருக்குறள் முற்றோதல் காலை 8.30 சிற்றுண்டி காலை 9.00 நூல்கள் வெளியீடு நூலாசிரியர்கள்: திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் திருக்குறள் செல்லம்மாள் திருக்குறள் தி.வே.விசயலட்சுமி வெளியிடுநர் : இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் ப.தாமரைக்கண்ணன் முனைவர் பா.வளன்அரசு வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு முற்பகல் 10.30  அறக்கட்டளைச்…

திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா

  தனித்தமிழ் இயக்கம் 100 மொழிப்போர் 50 மொழிஞாயிறு பாவாணர் 114 தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் அழைத்து மகிழ்நர்  : தலைவர் :அருள்வேந்தன் பாவைச்செல்வி செயலர்:  கே.கே.சா பொருளர் : சி.எசு.துரை

மொழிப்போர் 50 மாநாடு, மதுரை

தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/       மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்!   வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில்  தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்!   பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…

தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு

(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு  படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர்   ஆவணி 5, 2046 / ஆக.22, 2015  அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும்  தலைமுடி வழித்துச்   சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று  பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே  இப்பொழுது  அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…

மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்

  அன்புடையீர், வணக்கம். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும் பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளன.    பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.   அன்புடன் சி.சிதம்பரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி: +91 9843295951 மின்னஞ்சல்: mudalvaa@gmail.com.  …

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]  தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 2 தட்டச்சுப் பொறி:-             1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி…

கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus

77. கொண்மூ-Cirrus  கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…

கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus

 76. கணம்-Cirrostratus   கணம் அடுத்த அடுக்கில் 8000 பேரடி(மீட்டர்) உயரத்தில் கூட்டம் கூட்டமாக உள்ள குவியடுக்கு முகிலின் பெயர் கணம். மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் (புறநானூறு : 131.1) அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் (பதிற்றுப்பத்து : 17.11) இவ்வாறு இடி, மின்னல் இணைந்த மழை முகிலைக் கணம் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையே சிர்ரோசுதிரட்டசு/Cirrostratus எனக் குறிப்பிடுகின்றனர். கணம்-Cirrostratus – இலக்குவனார் திருவள்ளுவன்