“இலக்குவனார்” நூலாய்வு – த.கு.திவாகரன்
பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணையவழிக் கூட்ட எண் 60 ஆவணி 22, 2054 / 08.09.23 வெள்ளிக்கிழமைமாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நூலாய்வுநூல்: மறைமலை இலக்குவனார் எழுதியஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில்“இலக்குவனார்“அறிமுகவுரை:அரிமா முனைவர் த.கு.திவாகரன் இணைப்பு எண்: 82311400757கடவுச்சொல்: PERIYAR
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை. ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்- கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள் -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…
செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை
செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும். சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார். அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும்….
இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம் சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார் அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)
மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா
தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…
மொழி உரிமைப்போரில் பேரா.சி.இலக்குவனார் – மறைமலை உரை
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை மொழி உரிமைப்போரில் பேராசிரியர் இலக்குவனார் பங்களிப்பு தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி தலைமை : பேரா.ப.அர.அரங்கசாமி நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார்
சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்
சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன். அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…
இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரின் புதிய பார்வை இலக்குவனார் திருவள்ளுவன் தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார். உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ, அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…
தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார்
தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார் *முதன்முதலாகத் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோ விழா, ஔவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா என ஐந்து விழாக்களைத் தாம் பணியாற்றிவந்த கல்விநிறுவனங்களில் நடத்தித் தமதுமாணவர்களுக்கு மட்டுமன்றி அவர்தம் பெற்றோர்களுக்கும் தமிழுணர்வெழுச்சியைஊட்டியவர் இலக்குவனார் அவர்களேயாவர். *தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு வழங்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி “உளேன் ஐயா” என்று தமிழில் கூறும் வழக்கத்தைக் கொணர்ந்தவர் இலக்குவனாரே. *மக்கள்மன்றத்தில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வண்ணம் தந்தை பெரியார் எழுச்சியுடன் 1948-ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குப் பின் 1949-ஆம்…
இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்
குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு: “நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை…
“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்
“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார் பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத்…
எஃகுத்தமிழர் இலக்குவனார் – பொன்.செல்வகணபதி
எஃகுத்தமிழர் இலக்குவனார் இயற்பெயரிலேயே இலக்கு உடைய எஃகுத் தமிழர் இலக்குவனார்! அன்னைத் தமிழ்மீது ஆசை வைத்தவர் அதைக் காப்பதற்கென்றே மீசை வைத்தார்! பாவின் திறத்தாலே பைந்தமிழ் காத்தவர் பாவேந்தர்! இவரோ நாவின் திறத்தாலே நற்றமிழ் காத்த நாவேந்தர்! · * * * * * பிழைக்கத் தமிழ் படித்தோர் உண்டு தமிழ் படித்துப் பிழைப்பவரும் உண்டு! இவரோ தமிழ் தழைக்கத் தமிழ் படித்த தமிழர்! தமிழ் தழைக்கவே தலை நிமிர்ந்த தலைவர்! வேலை செய்யாமலிருக்க வேலை தேடுவோர் உண்டு! இவரோ வேலை…