ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 6
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 5 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 6 மருத நிலம் தொடர்ச்சி பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில்தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.60 ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றூர் எனப்படும். தமிழ்…
ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 5
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 4 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 5 மருத நிலம் ஆறு நிலவளமும், நீர்வளமும் உடைய தமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத காலந் தொட்டுப் பயிர்த்தொழில் பண்புற நடந்து வருகின்றது. பண்டைத் தமிழர் ஆற்று நீர் பாயும் அவல பரப்பைப் பண்படுத்திப் பயிர் செய்து மருத நிலமாக்கினார்கள். அருமந்த பிள்ளையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்.49 காவிரியாற்றைப் பொன்னியாறென்று புகழ்ந்தார்கள்; வைகையாற்றைப் “பொய்யாக் குலக்கொடி” 50 என்று…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 4
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 4 நாவல் நாவல் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரர் அவ்வூரிலே பிறந்தருளினார். ‘அருமறை நாவல் ஆதி சைவன் என்று பெரிய புராணம் கூறுமாற்றால் அவர் பிறந்த ஊரும் குலமும் விளங்கும். அந்நாவல், சுந்தரர் தோன்றிய பெருமையால் திருநாவல் ஆயிற்று. ஈசனால் ஆட் கொள்ளப்பெற்ற சுந்தரர் அவரடியவராகவும், தோழராகவும் சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார் அவர் பிறந்த ஊரைத் திருநாவல் நல்லூர் என்று…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது.32 பழமுதிர் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்.33 சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின் பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது. தோப்பு மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும்.34 தோப்பின்…
ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில் தமிழ் நாட்டில் மரம் செறிந்த காடுகள் மலிந்திருந்தன. பண்டைத் தமிழரசர்களாகிய கரிகால் வளவன் முதலியோர் காடு கொன்று நாடாக்கினர் என்று கூறப்படுகின்றது.19 ஆயினும், அந் நாளில் இருந்து அழிபட்ட காடுகளின் தன்மையைச் சில ஊர்ப்பெயர்களால், உணரலாம். இக்காலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று போற்றப்படுகின்ற ஊர்கள் முற்காலத்தில் பெரும்பாலும் வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால் அறியப்படும். சிதம்பரம் ஆதியில் தில்லைவனம்; மதுரை கடம்பவனம்; திருநெல்வேலி வேணுவனம்….
ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1
(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும் நிலமும் தமிழகம் பழம் பெருமை வாயந்த பாரதநாட்டின் தென்பால் விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் தமிழகம் தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர். பொதுவுற தமிழகம் நோக்கும்பொழுது பழந் தமிழகத்தில் மேல்நாடு சேரனுக்கும், கீழ்நாடு சோழனுக்கும், தென்னாடு பாண்டியனுக்கும் உரியன வாயிருந்தன என்பது புலனாகும். இங்ஙனம் மூன்று கவடாய் முளைத்தெழுந்த தமிழகம் மூவேந்தரது ஆட்சியில் தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால் வகைப்பட்ட நிலங்கள். தமிழகத்தில் அமைந்திருக்கக் கண்டனர் பண்டைத் தமிழர்.*2…
ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்
தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புகள் பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது. நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை அறிவுச் சுரங்கம் என்று கூறலாம். நூல்கள் பல திறம். பல திறத்துள் இரவியும் தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதன்றோ? “ஊரும் பேரும்” என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ் வரலாறு தமிழ் நாட்டின்…