தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ!   பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக  நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம்.   ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!  தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.   எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?  …

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.   ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது.   ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…

தன்மானத்தலைவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் – கதிர்நிலவன்

  நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் கார்த்திகை 29, 1990 / திசம்பர் 14, 1959 ஆரிய எதிர்ப்பும் திராவிட மறுப்பும்   1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.   முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க…

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது!: கருணாநிதி

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது! கலைஞர் மு.கருணாநிதி ” ‘தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்’ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், திகைப்புத் தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நேற்று (௨-௧௦-௨௦௧௫ ) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.   அதில், அமெரிக்கா…

கருணாநிதி இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு  திரட்டினார். “தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டி அங்காடி, அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, தா.பழூர்  முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட  ஊர்களிலும்  வாக்கு கேட்டார். சிலால் என்னுமிடத்தில்  பரப்புரையைத் தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:– இந்தத் தேர்தல்  சமயவாதத்திற்கும், மக்கள்நாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர் தலைவர் கலைஞர்…

தமிழகத்தில் புரட்சி நடத்த வேண்டிய கட்டாயம் : திருச்சியில் கருணாநிதி பேச்சு

 ”ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது,” என, திருச்சியில் நடந்த தேர்தல் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.  தி.மு.க., வேட்பாளர்கள் அன்பழகன் (திருச்சி), சின்னசாமி (கரூர்), சீமானூர் பிரபு (பெரம்பலூர்) ஆகியோரை ஆதரித்து, அவர் பேசியதாவது: “அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நீங்கள் கனவு கண்ட ஆட்சி வந்தது. அந்த ஆட்சி, சாதாரண மக்கள் வாங்கிப் புசிக்கின்ற விலைவாசியில் தான் கை வைத்தது. எது உயர்ந்தாலும், உயராவிட்டாலும் விலைவாசி…

தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார் செயலலிதா : கடலூரில் கருணாநிதி பேச்சு

  கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார்  செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும்  பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே  பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.  வருகின்ற வழியெல்லாம்  சிற்றூர்கள் தோறும்…

மத்தியில் நல்ல பிரதமரைத் தேர்ந்து எடுக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

  திருவள்ளூர் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்  இரவிக்குமாரை ஆதரித்து, ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த கூட்டத்திற்கு வர இயலாத நிலைமையில், உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்த என்னை, நம்முடைய தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட நிருவாகிகளும் வந்து சந்தித்து இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். உடல் நலிவு எனக்கு மட்டும் அல்ல, தமிழ்நாடே இன்று நலிவுற்று இருக்கிறது. அதை நீக்க அனைவரும் ஒன்று படும் நேரத்தில், நான் வீட்டில்…

மோடியால் தமிழ் மக்களைக் காக்க முடியுமா? கருணாநிதி கேள்வி

  காஞ்சிபுரம்: ”தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; தி.மு.க., அலைதான் வீசுகிறது. வடக்கிலிருந்து வருவதாக கூறப்படும் மோடி அலை தமிழக மக்களைக் காக்குமா?,” என, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். காஞ்சிபுரத்தில் தி.மு.க., வேட்பாளர், செல்வத்தை ஆதரித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: “இன்றைக்கு ஏதோ அலை வீசுவதாகச் சொல்கிறார்கள். அந்த அலையெல்லாம் நம் இயக்கத்தின் அலை. மோடி அலை என்கிறார்கள்; அது வடக்கிலிருந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அந்த அலை தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்குமா? நேற்றைக்கு வந்த மோடி…

நடராசர் கோயில் தீர்ப்புக்கு அரசின் பொறுப்பின்மையே காரணம் : கருணாநிதி

   சிதம்பர நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின் கவனமின்மையே  காரணம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது  நீக்கியுள்ளது.   அ.தி.மு.க. அரசு…