கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia
புதைவு வெருளி-Taphephobia அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69) வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123) முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2) மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12) தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் (கலித்தொகை : 39.2) முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப (அகநானூறு : 86.23) நிலம் புதைப் பழுனிய மட்டின்…
கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia
பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு. மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia புதுமை வெருளி-Neophobia புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16) இது தவிர, புதிது(14), புது(109), புதுவ(4), புதுவதின்(1), புதுவது(19), புதுவர்(1), புதுவன(1), புதுவிர்(2), புதுவை(1), புதுவோர்(5), புதுவோர்த்து(1), எனப் புது…
கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia
படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி…
கலைச்சொல் தெளிவோம்! 135 நீர் வெருளி-Aquaphobia
கலைச்சொல் 135 நீர் வெருளி-Aquaphobia தண்ணீர்(3), நீர்(699) ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தண்ணீரைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சத்தின் பெயர், நீர் வெருளி-Aquaphobia – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 137 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia
நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன (மதுரைக் காஞ்சி : 682) தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, (நெடுநல்வாடை : 55) நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், (மலைபடுகடாம் : 149) நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் (நற்றிணை : 154.9) நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் (குறுந்தொகை : 160.1) நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் (ஐங்குறுநூறு : 388.1) நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (கலித்தொகை :…
கலைச்சொல் தெளிவோம்! 136 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia
நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia நூல் நெறி மரபின், பண்ணி, ஆனாது (சிறுபாண் ஆற்றுப்படை : 230) செறிந்த நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர், (மதுரைக் காஞ்சி : 645-647) நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு (நெடுநல்வாடை : 76) திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, (கலித்தொகை : 99.3) நூலோர் புகழ்ந்த மாட்சிய (பெரும்பாண் ஆற்றுப்படை :487) என்பன போல் நூல்பற்றிய சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் உள்ளன….
கலைச்சொல் தெளிவோம்! 139 நோய் வெருளி-Nosophobia
நோய் வெருளி-Nosophobia வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து (பரிபாடல் : 4:13) உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் (ஐங்குறுநூறு : 28: 1) நோயொடு பசி இகந்து ஒரீஇ, (பதிற்றுப்பத்து : 13: 27) நோய் தணி காதலர் வர, ஈண்டு (அகநானூறு : 22:20) நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! (புறநானூறு : 13: 9) இவை போல் நோய் (259), நோய்ப்பாலஃது (1), நோய்ப்பாலேன்(2), நோயியர்(1), நோயேம்(1), நோயை(2), நோலா(1), நோவ(30), நோவது…
கலைச்சொல் தெளிவோம்! 138 நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia
நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப (திருமுருகு ஆற்றுப்படை :திருமுருகு ஆற்றுப்படை : 65) கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப (பொருநர் ஆற்றுப்படை : 98) நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு (முல்லைப் பாட்டு : : 81) அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின் (மதுரைக் காஞ்சி : : 472) அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து (குறிஞ்சிப் பாட்டு : : 211) நெஞ்ச(1), நெஞ்சத்த(1), நெஞ்சத்தவன்(1), நெஞ்சத்தன்(1),…
கலைச்சொல் தெளிவோம்! 132&133. நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia
நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia நடக்க (1), நடக்கல் (1), நடக்கும் (5), நடத்த (2), நடத்தல் (1). நடத்தி (1), நடத்திசின் (1), நடந்த (5), நடந்து (8), நடப்ப (1), நடலைப்பட்டு (1), நடவாது (1), நடவை (2), நடன் (1), நடான (1), நடை (119), நடைய (1), நடையர் (1), நடையோர் (1), நில் (6) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. நடப்பதற்கும் நிற்பதற்கும் தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதுண்டு. இவையே நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia…
கலைச்சொல் தெளிவோம்! 131. நஞ்சு வெருளி-Iophobia
நஞ்சு வெருளி-Iophobia/Toxiphobia/Toxophobia/Toxicophobia நஞ்சு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் 4 இடங்களில் பயன்படு்த்தி உள்ளனர். நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; (நற்றிணை : 355.7) கவை மக நஞ்சு உண்டாஅங்கு (குறுந்தொகை : 324.6) நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை (கலித்தொகை : 74.8) நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, (புறநானூறு : 37.1) பிறர் நஞ்சு கொடுத்துக் கொல்வார்களோ என எண்ணி ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய நஞ்சு வெருளி-Iophobia , Toxiphobia, Toxophobia, Toxicophobia…
கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia
கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12) முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71) செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12) தொழில் செருக்கு (அகநானூறு : 37.6) மழை தொழில் உதவ (மதுரைக்…
கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin
ஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன்