கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி. ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன். கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு…
கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை! கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை! செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும் திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்! புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும் புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்! அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும் அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21) அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்! கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ! கவிதைக்குள் குறுவாளாய்க்…
கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன் சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும் துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும் மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்! மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்! வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை! அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும் அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19) கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக் கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா? புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப் பொய்யகற்றப்…
கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்! அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும் பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும் பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு! ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17) விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின் விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்! மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?…
கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை! ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை, இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை! பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப் பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை! செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15) வேருக்கு நீருழவன் விடுவ தாலே விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்! பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும் பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து…
கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று! கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்! மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம் மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில் பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்! பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13) தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்? பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை! பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை…
கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும் மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு! திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும் திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ! உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று! திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு! தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11) பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப் படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள் அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்!…
கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின் பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி! கையிரண்டு போதாது கயமைக் கென்றே கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்! மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்! செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச் சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9) வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு, விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்! நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்! நோகாமல் இலக்கடையும் நுட்பம்…
கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே? எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்! இதைத்தானா சுதந்திரத்தின்…