வடநூல் இலக்கியங்களை விட சங்க இலக்கியங்கள் சிறந்தன.

பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன!   வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப்பற்றைநாட்…

சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா

  சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்ந்தெடுக்கும் சர்வ பண்டிதனாரம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர்நூலை அறிந்தோர் சொற்பம்; புராணக் கதையைப் போற்றிடுவோரே…

அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி

வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்      மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்      உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்      நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை      தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்      ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…

மின் ஊடகங்களில் சங்கச்சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் – கருத்தரங்கம்

மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி மார்கழி 24-26, 2045 / 08-10.2014         (மங்கல் நிறம். ஆதலின் தெளிவில்லை.)    

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (நிறைவு) செ.வை. சண்முகம்

  மையக்கருத்துரை   (கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி)   5.2. இறைச்சி         தொல்காப்பியர் இறைச்சியைப் பொருளியலில் மூன்று சூத்திரங்களில் (35 – 37) விளக்கியுள்ளார். ‘இறைச்சிதானேஉரிப்/பொருட்புறத்ததுவே’   என்பது முதல் சூத்திரம். அதில் உரி/ பொருள் என்ற இரண்டு பாடம் காணப்படுகிறது. இங்கு ‘உரிப்பொருள்’ என்ற பாடம் கொண்டால் அதுவும் மனிதவாழ்க்கை (உரி) ஆனது. கருப்பொருள், முதல்பொருள் (உரிப்புறத்தது) ஆகியவற்றால் தாக்கம்பெறும் என்று ஆகும்.          ‘அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும்          வன்புறையாகும் வருந்திய பொழுதே’ (பொருளியல்…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) செ.வை. சண்முகம்

(கார்த்திகை 21 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி)   மையக்கருத்துரை   5. கூடுதல் பொருள்          கருப்பொருள்,   உள்ளுறை, இறைச்சி என்ற இரண்டு நிலையில் கூடுதல் பொருள் உணர்த்துவதாகத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார்.   இலக்கியத்தில் இறைச்சியில்   முதலும் கூடுதல் பொருள் உணர்த்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது (சண்முகம், 2009: 13, 2012: 300). 5. 1. உள்ளுறை    கவிதையியல் நோக்கில் உவமையை உள்ளுறை உவமம், ஏனை உவமம் என வகுக்கும் சூத்திரத்திலேயே ( அகத்திணை 46 ) ‘தள்ளாதாகும் திணைஉணர்   வகையே’  என்று…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்

(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை   4. தொல்காப்பியர் நோக்கு    தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி          ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே                நுவலுங் காலை முறை சிறந்த னவே                பாடலுள் பயின்றவை நாடுங்…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

  மையக்கருத்துரை   கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி 4.1.1.முதலும் கருவும்               ‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து                அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை                இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து               பிள்ளை உள்வாய்ச் செரீஅய               இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92). இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு….

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

 மையக்கருத்துரை   முன்னுரை    சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை   சூழ்ந்திருத்தல் (surrounding),   படர்தல் (spreading), ஆராய்தல் (deliberation), கருதுதல் (intention),   ஆலோசித்தல் (consultation) என்று ஒருசொல்பலபொருளாகப் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது (அகநானூறு , பார்க்க, சுப்பிரமணியன் 1972 ) . சூழல் என்ற தொழில்பெயர்   பரிபாடலில் (‘புடை வரு சூழல்’ 19. 20 ௦) பயின்றுள்ளது. ‘சுற்றமாச் சூழ்ந்துவிடும்’ ( 475) என்பது திருக்குறள் வழக்கு. இங்குச் சூழ்ந்திருத்தல் என்ற பொருளே பொருந்தும். அது பல பொருள் ஒரு சொல்லாக இருப்பதால், சுற்றுச்சூழல்…

குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள் 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 21. கள்ளி இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.  ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’ வெண்பூதியார்: குறுந்தொகை:174:2 (நொடி – ஒலி) கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.  ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’ மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5  22. காஞ்சி காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய  பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள்…

குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்: 1/5 -இலக்குவனார்திருவள்ளுவன்

           பழந்தமிழர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பது நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இருந்தே நன்கு புலனாகின்றது. சங்கஇலக்கியங்களில் உள்ள சில வானியல் செய்திகளையும் அறிவியல் விதிகளையும் வேளாண்மைச் செய்திகளையும் திரும்பத்திரும்பக் கூறுகிறோமே தவிர, சங்கக்கடலில் புதைந்துள்ள அறிவியல் வளங்களை முழுமையாக இன்னும் வெளிக்கொணரவில்லை. அறிவியல்தமிழ்க் கருத்தரங்கங்கள் இத்தகைய முயற்சிகளுக்குத் துணைநிற்பது பாராட்டிற்குரியது.           சங்கஇலக்கியங்களில் உயிரியல்செய்திகள் மிகுதியாக உள்ளன. பொதுவாகப் பயிரியல் விலங்கியல்களில் தோற்றம், வகை, வண்ணம், செயல்பாடுகள், பயன், ஒப்புமை அல்லது வேறுபாடு, வளரிடம், சூழ்நிலை, உறுப்புகள், இனப்பெருக்கமுறை, இடப்பெயர்ச்சி முதலானவைபற்றித்தான் படிக்கிறோம்….