சங்க இலக்கிய அறிஞர் வைதேகி அம்மையாரின் பட்டறை- தேவகி

சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை (வட கரொலினா) சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனும் ஐயத்திற்கான விடை தேடுமுகமாக, வட கரொலினாவில் திருமதி. வைதேகி அவர்கள் நடத்திய ‘சங்க இலக்கியம் படிப்பது எப்படி’ என்கிற பயிற்சிப் பட்டறை தொடங்கியது. எளிமையான தோற்றம், செழுமையான இலக்கிய அறிவு, கற்பவர் உள்ளம் கவர கற்பிக்கும் திறன் என அனைத்தும் ஒருங்கே அமைந்த தமிழ்ப் பெண் திருமதி. வைதேகி என்றால் அது மிகையாகாது. முதல் நாள் பட்டறை: சங்க இலக்கியத்தை அவர் எப்படிப் படிக்கத் தொடங்கினார்…

மாமூலனார் பாடல்கள் – 10

 –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) “நம் உயர்வை  நினைந்தனர் காதலர்” – தோழி  (தலைவியும் தோழியும்)  தலைவி: தோழி! அவர் சென்றுவிட்டாரா? நேற்று அவர் உரையாடும் போதே அதன் குறிப்பு . . . . .  தோழி: அவர் பிரிந்து பொருள் தேடச் செல்வார் என்ற குறிப்புத்தானே?  தலைவி: ஆம்.  தோழி: உங்களிடத்தில் “நான் போய் பொருள் தேடி வருகிறேன்” என்று கூறினால் “நானும் புறப்படுகிறேன்” என்பீர்கள். அதனால்தான் குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றார்.  தலைவி: அவர்…

மாமூலனார் பாடல்கள் – 6

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ரு. விழுச்சீர் வேங்கடம் பெறினும்-?     ஓர் இளைஞன் கருத்திற்கு ஒத்த காதலியை மணந்தான் மணஇன்பம் நுகர்ந்துகொண்டு இருக்கின்றான். ‘பிறர்க்கென வாழவேண்டும்’ என்ற பெரியோர் உரை நினைவிற்கு வருகின்றது. “மற்றவர்க்கு உதவிசெய்தல் வேண்டும். உதவி செய்வதற்குப் பொருள் மிக வேண்டும் அப்பொருள்தானும் நம்மால் தேடப்பட்டபொருளாக இருத்தல் வேண்டும்.” என்று நினைக்கின்றான். ‘தலைவி’ ‘அன்ப’ “எவ்வளவோ உண்மைகள் இருக்கின்றன. தாங்கள் எதைக் கருதுகின்றீர்களோ?” “எவ்விதத்திலும் மறுக்கமுடியாத எவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை ஒன்று…