சாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

சாதி எதிர்ப்பை நலிவாக்கவும் சாதி அமைப்பை வலுவாக்கவும் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. வடஇந்திய நாகரிகத்தையும்   பண்பாட்டையும் பின்பற்றிய காரணத்தினால் தமிழ்நாட்டில் படிப்படியாகச் சாதி அமைப்பு ஏற்பட்டது. முனிவர்களும் அறிஞர்களும் சாதி முறையை எதிர்த்தனர். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட புலவரும், மெய்யியல் அறிஞருமான திருவள்ளுவர், சாதி அமைப்பை “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” “அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” எனக் கண்டிக்கிறார்….

“அந்தணர் என்போர்….” – புலவர்மணி இரா. இளங்குமரன்

   தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை. திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார். அரசர் ஒரு சாதி அன்று; வணிகர் ஒரு சாதி அன்று; வேளாளர் ஒரு சாதி அன்று; எவரும் அரசராகவோ, வணிகராகவோ வேளாளராகவோ ஆகலாம். அவ்வாறே, எவரும் அந்தணர் ஆகலாம். அது சாதிப் பெயர் அன்று என்பதன் சான்று இது. அந்தணர்…

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்! சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள…

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

                ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில்      உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும்      வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.                 கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக்      கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச      நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?                    கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி      கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம்      பல்லவி பாடிப் பயன்…