14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

  மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…

மங்கலதேவிக் கோட்டம் – நூல் அறிமுகம் : தொல்காப்பியன் தங்கராசன்

மங்கலதேவிக் கோட்டம். நூல் அறிமுகம். காப்பிய ஆக்கம்; சிங்கப்புரம்(சிங்கப்பூர்) கோ.அருண்முல்லை. ஆனி 29, 2045 / சூலை, 13,2014 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் பொது நூலகத்தில் 5,ஆம் தளத்தில் நடக்கவிருக்கிறது பூம்புகார், கடலில் மூழ்கிவிட்டது. பண்பாட்டு அடையாளம் யாவும் அதில்தொலைந்துபோனது என்று எவ்வளவு காலந்தான் சொல்லிக்கொண்டிருப்பது? அதை ஆய்வுசெய்தால் என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனையே இந்தக் காப்பியம்.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பித்த பூம்புகார் காட்சியை காட்சியைஇன்றும் கண்டார்கள் என்பதாகக் கற்பனை செய்து அதைக் காப்பியமாகவடித்ரிருக்கிறார். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில்எழுப்பிச் சிறப்பித்தான் என்பது வரலாறு.இன்று தங்களுடையது,…

இந்தியத் தூதரகம் கைவிரித்ததால் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டோம்

  இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவி செய்யாததால், வெளியேற்றப்பட்டதாகச்  சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் 21.12.13 சனிக்கிழமை யன்று தெரிவித்தார். சிங்கப்பூரில்  சிற்றிந்தியா பகுதியில்  08.12.13 அன்று நேரிட்ட சாலைநேர்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த ச. குமாரவேல் உயிரிழந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ஏறத்தாழ 30 பேர்  காவல்துறையினரால் தளையிடப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதைத் தொடர்ந்து 53 இந்தியர்களைக் கலவரத்தில் தொடர்புடையதாகக் கருதி சிங்கப்பூர் அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது….

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையைத் தடுக்க வேண்டும் – மரு.இராமதாசு

 சிங்கப்பூரில் சிற்றிந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப்  பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்:– சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும்  சிற்றிந்தியா (லிட்டில் இந்தியா) பகுதியில் நிகழ்ந்த சாலை  நேர்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்றிந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உட்பட 25 இந்தியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும்  தளையிட்டுள்ளனர்….

சிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம்!  இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர்,  கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும்  நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார்.  இவரே அந்த இளைஞர் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.  பேருந்து மோதி இறந்ததாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தாலும், அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர்  இறப்பு குடும்பத்தினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் …