புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: அடிப்படை ஒன்றுதான்

புறநானூற்றுச் சிறுகதைகள் 6. அடிப்படை ஒன்றுதான்   “உலகில் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பரந்து வாழும் மனித குலத்திற்குள், வாழும் முறையாலும் துறையாலும் வேறுபாடுகள் காண்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ற ஒன்றின் மூலமான அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா? ‘மனித வாழ்க்கை’ என்ற ஒரு பொதுவான தத்துவத்தில் வேறுபாடு இருப்பது பொருந்துமா? இருக்கத்தான் முடியுமா? வாழ்க்கையின் சூத்திரக் கயிறு தொடங்கும் இடத்தையே ஆராய்ந்து பார்க்க விரும்பும் இந்தத் தத்துவரீதியான வினா நக்கீரர் என்ற பெரும் புலவருக்கு எழுந்தது. இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த…

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: பரணர் கேட்ட பரிசு

புறநானூற்றுச் சிறுகதைகள் 5. பரணர் கேட்ட பரிசு   பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா? அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா! எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர்.   அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும்? உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்….

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: இது ஒரு வாழ்வா?

புறநானூற்றுச் சிறுகதைகள் 2. இது ஒரு வாழ்வா?     சோழ மன்னன் செங்கணானுக்கும் சேரமான் கனைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் சோழன் செங்கணான் வெற்றி பெற்றுவிட்டான். தோற்றுப்போன கணைக்கால் இரும்பொறையைச் சிறை செய்து சோழ நாட்டின் தலைநகரில் இருக்கும் குடவாயில் கோட்டத்துச் சிறைச்சாலையில் அடைத்தும் விட்டான்; பெரு வீரனான சேரமானைக் கைதியாக்கித் தன் சிறையில் கொணர்ந்து அடைத்ததனால் இணையற்ற பெருமிதம் கொண்டிருந்தான் செங்கணான்.   செங்கணான் கொண்ட பெருமிதத்திற்குக் காரணம் இருந்தது. பிறர் எவருக்கும் அடிபணிய விரும்பாமல் சுதந்திரப் பேரரசனாகத் தன்மானப் பண்பிற்கே இருப்பிடமாய்…

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3 – மு.இளங்கோவன்

(இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 தொடர்ச்சி) இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3  ‘கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின்…

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 – மு.இளங்கோவன்

(இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 தொடர்ச்சி) இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3   ‘வெட்டிக்காடு’ என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி முதலிய தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறு மாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் சிற்றூர்ப்புறத் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு…

ஆனந்தமாகிறாள் – ஆ.செந்திவேலு

ஆனந்தமாகிறாள்   பல் வரிசை தப்பினது அவளுக்கு மிக அழகாகவே அமைந்து போயிருந்தது. இவளை மாதிரித் ‘தெத்துப்பல்’தான் அந்தப் புகழ்மிகு திரைப்பட நடிகைக்கும் கூட தனிப்பட்ட  தன்மையாய் அமைந்துள்ளது என எண்ணிக் கொண்டவன் அதை நேரிடையாய் அவளிடமே சொன்னதும் பெரிய கலவரமாகித்தான் போனது. இருந்தும் அப்போது அதை  மகிழ்ச்சியாகவே எதிர் கொண்டவன் இப்போது எல்லாம்  நிரம்பவும் மாறித்தான் போயிருந்தான். நந்தினி !   ஆனந்தனின் வம்புக்கு ஆளானவள், ஆசைப்பட்டவள். இப்போது அவள் எதிராய் நடந்து வந்தாள் என்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வது அவன் வழக்கமாகவே ஆகியிருந்தது….

குமரித்தமிழ்வானம் அமைப்பின் நூற்கள் திறனாய்வு

  நூற்கள் திறனாய்வு குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் ப.மாதேவன்(பிள்ளை) எழுதிய”ஒரு கோட்டைக்கதைகள்” சிறுகதைத்தொகுப்பும், கிருட்டிணகோபால் எழுதிய,”ஆடிமாதமும் வயலின் இசையும்” சிறுகதைத்தொகுப்பும் திறனாய்வு செய்யப்படுகின்றன. நாள்:  மாசி 09, 2047 / / 21-02-2016 ஞாயிறு மாலை 4.00 மணி. இடம்:பாபு(சி) நிலையம், மரவாடி(timber depot)தெரு,  இராணித்தோட்டம், நாகர்கோவில்.

அணிற்பிள்ளை – தி.ஈழமலர்

கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்!   பிறந்து ஓரிரு நாட்களே ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் – பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை.   அந்த அணில், இவர்கள் புதுமனை புகும் பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பொழுது, அழகன் மட்டும் தாத்தாவின் அறையை அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன்…

நீலவானத்தில்…. – கோ.மோ.காந்தி, கலை.மு.,

    என் வாழ்வின் நிலை என்னைக் கலங்க வைத்தது. அதற்காக நானே இரங்கினேன்.   திருமணமாகி எட்டு மாதங்கள் தாம் ஆகின்றன…. ஆனால் அதற்குள்… எவ்வளவு மாறுதல்கள்…! என் நிலையே மாறிவிட்டதுபோல் தோன்றுகின்றதே! எப்படி வளர்ந்தேன்… ஆனால் இப்போது..?? எவ்வளவு மாறிவிட்டேன். என் உள்ளமே அடியோடு மாறிவிட்டதா…?? எத்தனை மாறுதல்கள்!! இப்படி மாறிவிடுவேன் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லையே.   எல்லாம் கனவு மாதிரித்தான் தோன்றுகிறது ஆம்…! தன் சட்டையைக் கழற்றும் பாம்பு மாதிரி நானும் என் உள்ளத்தின் நிலையை மாற்றியமைத்துக் கொண்டிருக்க வேண்டும்…

பட்டம் உறுதியாயிற்று -முனைவர் கண சிற்சபேசன்

      அப்பகுதி மக்கள் அவனைப் பொதுவாகப் பைத்தியம் என அழைப்பார்கள். கல்வியறிவுடையோர் சிலர் விஞ்ஞானி என்பார்கள். அறிவோர் சிலர் ‘‘அவன் தான் சிறந்த மனிதன்; தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவன்’’ என்பார்கள். ‘‘உள்ளே உள்ளதை மறைக்க நடிக்கும் இவன் காரியக் கிறுக்கு’’ என்பார்கள். கற்றறிந்த சில இளைஞர்கள், இவை எல்லாம் அவனுக்குத் தெரியும். ஆனால் இதைப்பற்றி, அவன் கவலைப்படுவதுமில்லை. அவர்களைத் திருத்த முனைவதுமில்லை. தனியே வாழும் அவனது அறையில் காலை 6 மணிக்குத் தட்டுப் பொறி இயங்கத் தொடங்கும். ஒரு…