சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்

சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது.  அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன.  அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது. தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது.  தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது.  சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது. வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது.  அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது.  தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது. …

ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு

 “தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா?  அப்பாவும் நானும், முன்பே  எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!”  “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!”  “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…

உயர்ந்தவர்கள் மூவர் – அன்பு

  தமிழய்யா பத்தாம் வகுப்பு  அ பிரிவைக் கடந்து செல்லும் பொழுது  கணக்கையா யாரையோ அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.   “என்னங்கய்யா, நல்லானையா அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவன் நன்றாகப் படிப்பானே!”   கணக்கையா அடிப்பதை நிறுத்திக் கொண்டு, “நன்றாகப் படித்து என்ன? நல்ல பண்பு இருக்க வேண்டுமல்லவா” என்றார்   பெயருக்கேற்ற  நல்லவன்தான் அவன். “என்ன  நடந்தது” என்றார்.   “போன வகுப்பு இவர்களுக்கு விளையாட்டு. யாருமில்லை. நான் மட்டும் பையை வைத்து விட்டுத் தலைமை ஆசிரியரைப் பார்த்து…

அழகு மங்கை

 –  அன்பு    இன்று மாலை  தெரிந்து விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான் கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச் சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக் கிடைக்கும் என்பதுபோல் சிலரும்,  இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும்  இருந்தனர். என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக அழகி, நகர அழகி என்றெல்லாம் வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில்   அழகியைத் தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம் வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள்….

நீதான் கண்ணே அழகு! – அன்பு

  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும்….

பிற்பகல் விளையும் – ஆல்பர்ட்டு, விச்கான்சின், அமெரிக்கா.

“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான். திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன். “ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான். “நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன். “இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும்…