தமிழ்ப்புத்தகம் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
View Post
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! – இலக்குவனார் திருவள்ளுவன்
எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமெய் அறிவாய்! – மு.பொன்னவைக்கோ
அகரமெய் அறிவாய்! க ங ச ஞ சொல்லட்டுமா? கல்விக் கற்கச் செல்லட்டுமா? ட ண த ந சொல்லட்டுமா? தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா? ப ம ய ர சொல்லட்டுமா? பண்பைப் பெற்று வெல்லட்டுமா? ல வ ழ ள சொல்லட்டுமா? வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா? ற ன ற ன சொல்லட்டுமா? மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா? முனைவர் மு.பொன்னவைக்கோ
ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்
ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37
சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்
சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற! சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 36
விளையாட்டு – சந்தர் சுப்பிரமணியன்
விளையாட்டு பந்துருட்டி ஆடுகின்ற பாலகர்கள் ஓர்புறம்! பந்தயத்தில் முந்திமுந்திப் பாயுமன்பர் ஓர்புறம்! மூச்சடக்கி நீர்க்குளத்தில் மூழ்குமக்கள் ஓர்புறம்! பேச்சடக்கி யோகமங்குப் பேணுமன்பர் ஓர்புறம்! தட்டியொன்றை நோக்கியோடித் தாவுமன்பர் ஓர்புறம்! விட்டெறிந்த ஈட்டிதேடி விரையுமன்பர் ஓர்புறம்! எட்டிநின்று பார்த்துளத்துள் ஏங்குகின்ற பையனே! மட்டிலாத இன்பமுண்டு! வாட்டமென்ன? வாஉளே! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 35
வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன் மண்ணில் வீழ்ந்த மலரே மீண்டும் மரத்தை அடைகிறதோ! – அட! வண்ணப் பூச்சி வந்தென் முன்னர் வலம்தான் வருகிறதோ! விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ! – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ! தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ! – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 34
உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்
உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) அந்நாளில் சீருள் – பூஞ் செந்தேனைக் கொண்டோள் ஔவை! பண்பாடி ஈர்க்கும் – பூம் பெண்வேங்கைச் சொற்கோ ஔவை! தன்வாழ்வில் மீளும் – ஊழ் வென்றேழ்மை கொன்றோள் ஔவை! பண்வானின் மீனுன் – பூ வெண்மேன்மைப் பொற்போ ஔவை? – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்
எண்ணிக்கை ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம்…
அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன்
அகரப் பாடல் அறிவைத் தீட்டு ஆணவம் ஓட்டு இறையைப் போற்று ஈகை ஆற்று உறவோடு இணை ஊக்கம் துணை எளிமை நாடு ஏழைமை கேடு ஐந்தின் பயன்காண் ஒன்றிப் பிழை ஓயாது உழை ஔவெனப் பழகு அஃதுடற்கு அழகு – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 32
பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா
பாடுவேன், ஊதுவேன்! பாட்டுப் பாடுவேன்-நான் பாட்டுப் பாடுவேன். பலரும் புகழ, இனிய தமிழில் பாட்டுப் பாடுவேன். கேட்டு மகிழவே-நீங்கள் கேட்டு மகிழவே, கிளியின் மொழிபோல் இனிய தமிழில் கீதம் பாடுவேன்-நான் கீதம் பாடுவேன். குழலை ஊதுவேன்-புல்லாங் குழலை ஊதுவேன். கோகு லத்துக் கண்ணன் போலக் குழலை ஊதுவேன்-நான் குழலை ஊதுவேன். அழகாய் ஊதுவேன்-மிக்க அழகாய் ஊதுவேன். அனைவர் மனமும் மகிழும் வகையில் அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்