இலாத்துவிய மொழியில் திருக்குறள்!

இலாத்துவிய மொழியில் திருக்குறள்   காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram).   இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை!   ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00  உரூ.   கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்:  ஆவணி 03, 2046 – 20.8.2015 முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009          தொ:0413-2247072;  பேசி 9791629979 நெறிமுறைகள்: அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும். கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா தேர்தெடுக்கப்பட்டகதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’ மாதஇதழில் வெளியிடப்படும். நடுவர் தீர்ப்பே இறுதியானது . சிறுகதைப்படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும் பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 உரூ. இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 உரூ. இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500 உரூ.   க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ்இயக்கம்

மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா

       தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்  தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா;  3ஆம் பரிசு 200 உருவா.    நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8.  தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம்  உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் :  தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,  தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009   படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி…

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி   தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00 உருவா   கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014 முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072   நெறிமுறைகள்:    1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும். 2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும்பெயர், முகவரிகளைத்தனித்தாளில்இணைத்துஅனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர்இருக்கக்கூடாது. 3. மொழிபெயர்ப்பு, முன்னரேவெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா 4. தேர்தெடுக்கப்பட்டகதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும். விருப்பம்உள்ளவர்கள்அதற்கானவிலைஉருவா 20.00 இணைத்துஅனுப்பவேண்டும் 5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது . 6. சிறுகதைப்படைப்பாளர்உறுதிமொழிஇணைக்கவேண்டும் பொறிஞர்இரா.தேவதாசுஇவ்வாண்டு  பரிசுகள்வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 இரண்டுமூன்றாம்பரிசுகள்…

சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014

தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு  அழைப்பு     தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும்.   இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது? சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை?  சிறுவர்க்கு…