சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை

சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை     செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்

தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார் – மு.வை.அரவிந்தன்

தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார்   அடியார்க்கு நல்லார் தமிழ்க்கலையின் மாண்பைப் போற்றி விளக்கியுரைத்த குரல், காலங்கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது.   இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடியார்க்கு நல்லார் உரையே பெரிதும் உதவியது.   தமிழ்க் கலைகளைப் பல நூற்றாண்டுகளாகக் காத்து வழங்கிய பெருமை இவர் உரைக்கு உண்டு. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்

12,000 பண்களுக்கு உரிமையான தமிழிசைச் செல்வம்

    ஆடல் பாடல் இசையே தமிழ் (3,45) என்ற அடியில் வரும் இசை என்பதை விளக்கும் அரும்பதவுரையாசிரியர் “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும்’ என்று கூறுகிறார்.   இன்றைய கருநாடக இசையுலகில் கூறப்படும் இராகங்களின் எண்ணிக்கை 1230க்கு மேல் இல்லை. அன்ற இருந்தனவாக அரும்பதவுரைகாரர் கூறும் 11991 என்ற பண்களின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. இந்த எண்ணிக்கை ஏதோ குத்துமதிப்பாகச் சொன்னதாக இருக்காது என்பது உறுதி. அப்படிச் சொல்லியிருந்தால் ‘பன்னீராயிரம் ஆதியிசைகள்’ என்று சொல்லியிருக்கலாம். ஏதோ…

கருநாடக இசை என்பது தமிழிசையின் பிற்கால வளர்ச்சியே

 நம்நாட்டில் மிகப் பழமையானது, தொன்மைச் சிறப்பு வாயந்தது என்று போற்றப்படுவது தென்னாட்டுக் கருநாடக இசையாகும். ஆனால் இக்கருநாடக இசையின் வரலாற்றினை நடுநிலையான உள்ளத்தோடும், நெறியுடனும் ஆராய்ந்து நோக்கினால், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தோன்றி பண்டைய தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்ந்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்று நன்கு விளங்கும். – முனைவர் சு.சீதா: தமிழகக் கலைச் செல்வங்கள்: இசைக்கலை: பக்கம்.86

தமிழிசைச் சிறப்பு வேறு எந்த நாட்டு இசையிலும் இல்லை

 சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் தமிழிசைபற்றி அறிவித்துள்ள கருத்துகள் அளவில் இன்றைய அறிவுக்கும் மிஞ்சியதாக அமைந்திருப்பதைக் கண்டு தமிழிசையின் வாழ்வையும் வளர்ச்சியையும் கருதிக் காணலாம். இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள கருத்துகள் உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைத்துக் காணப்படாதவை. ஓசையின் அளவு, இசையமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை, ஏழிசை, இசை அலகு பெறல், பண்களின் பெயர்கள், இசையின் எண்கள் முதலியவற்றைத் தனித்தனியாக விளக்கிக் காட்டும் அளவுக்குத் தமிழிசை ஈராயிரம் ஆண்டுகளுக்கு…

தமிழ்ப்பாடல்களில் அயல்மொழி ஒலிகள் வரக்கூடா!

 ‘தமிழே’ என்பதை, “தமிழாவது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும், இயலிசை நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழர்களும்’ என்று விளக்குகிறார். அரும்பதவுரைகாரர். தமிழ்பாடல்களில் ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ என்ற வடமொழி ஒலிகள் வரலாகாது என்ற நெறி இசையுலகிலும் அன்று கடைப்பிடிக்கப்பட்டது என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே ‘ஸம்போ மஹாதேவா’, ‘நாயகர் பக்ஷமடி’, ‘ஜங்கார ஸ்ருதி செய்குவாய்’ என்றெல்லாம் இன்று பாடுவது தமிழிசையிலக்கணத்துக்கு மாறானது என்பது புலனாகிறது. – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: பக்கம். 23

தமிழ்ப் பெயர் தொலைத்த தமிழர்கள்

  இசைநாடகத் துறைக் கலைச்சொற்கள் அனைத்தும் இன்று வடமொழியாக்கப்பட்டு வழங்குகின்றன. உலகிலேயே முதலில் தோன்றிய மூத்த இசை என்று போற்றப்படும் இசை, தமிழன் கண்ட தமிழிசை, இன்று ‘கருநாடக சங்கீதம்’ என்று பெயர் மாறியுள்ளது. மதிவாணனார் செய்த ‘நாடகத்தமிழ்’ போன்ற நூல்களிற் கூறப்பட்ட தமிழன் கண்ட கூத்து முறை இன்று ‘பரதநாட்டியம்’ என்று பெயர் மாறியுள்ளது. பெயர் மாறிப்போன தன் பிள்ளைகளையே இன்றைய தமிழன், “யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ?” என்று மயங்கிப் பாராமுகமாய் இருந்து வருகிறான். – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்…

கலைச்செல்வத்தை மீட்டெடுப்போம்!

  கடல்வாய்ப் பட்டனவும் காலத்தின் மாறுதலினாலே மறைந்து போயினவுமாகிய நூல்கள் மிகப் பல. அந்நூற் பெயர்களைக் கூறிப் பழமை பாராட்டுவதோடு அமைந்திருப்போமா? இல்லை. முன்னிருந்த கலைச் செல்வத்தை மீட்டும் பெறுவதற்கு முயல்வோம். அத்தகைய முயற்சி நமது நாட்டிற்கு ஆக்கமளிக்கும். – விபுலானந்த அடிகள்: யாழ்நூல்: பாயிரவியல்

தமிழிசையே பிற இசைகளுக்குப் பிறப்பிடம்

  தமிழிசையே பிற இசைகளுக்கெல்லாம் பிறப்பிடம். தமிழிசையிலிருந்துதான் பிறமொழி இசைகள் கிளைகளாகப் பிரிந்து சென்றன. தமிழிசைப் பண்களே பிற்காலத்தில் பெயர்மாற்றங்களும் இடமாற்றங்களும் பெற்று வடமொழிப் பெயர்களைப் பெற்றுவிளங்கின என்பதற்கெல்லாம் தக்க ஆதாரங்கள் இங்கு (சிலப்பதிகார வேனிற்காதையில்) நமக்குக் கிடைக்கின்றன. – இசைப் பேரறிஞர் முனைவர் சேலம் செயலட்சுமி : சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள் பக்கம். 322

தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி

வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்; வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)

தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா

தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…

2014 தமிழிசை விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை Federation of Tamil Sangams of North America இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் Sangeeth Saagar Cultural Trust 10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும் 2014 தமிழிசை விழா இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 அபிபுல்லா சாலை, வடக்கு உசுமான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 மார்கழி 14, 2045 / 2014 திசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048 நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி…