தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 16-20 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23 பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21) நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22) அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…
தமிழ்த்தாய் வணக்கம் 16-20 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 16-20 பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழன்று! (16) எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை. (17) பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18) எங்கும் தமிழாய்…
தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால் புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில் அமிழுந் துயரை அகற்று. (11) பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத் தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச் சிந்தை செலுத்து சிறிது. (12) அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப் பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால் ஆடுகின்ற தென்றன் அகம். (13) தென்னகத்தைச் சேர்ந்திருக்கும்…
தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி
தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே! பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் ! கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்
தமிழ் வாழ்த்து – கவிஞர் முத்தரசன்
நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! ஆர்ப்பரிக்கும் ஆட்சியிலும் ஆளுமைசெயும் தமிழே! போர்ப்பாட்டுப் பாடுதற்குப் புறப்பட்ட பூந்தமிழே! பொறுமையுடன் நடனமிடும் புதிரான தமிழே! பெருமையுடன் வாழ்த்துகிறேன்! பெருமிதமும் கொள்கின்றேன்! வந்தாரை வாழவைக்கும் வளமான செந்தமிழே! சொந்தமெனும் உணர்வோடு சொக்குகிற தமிழே! சிந்திக்கத் தெரிந்தவர்க்குச் சிரிக்கின்ற தமிழே! நிந்திக்கத் தெரியாத .நிலைத்தபுகழ்த்தமிழே! சொல்லில் அடங்காத சொல்லடுக்குத் தமிழே! பல்சுவையில் குன்றாத பழம்புகழே! பார்முதலே! வெல்கின்ற வழியெமக்கு விழிப்புடனே தந்திடுவாய்! நல்லோனாய் இருந்திடவே நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! – கவிஞர் முத்தரசன்
தமிழ்த்திரு வாழ்க – கவியோகி
தமிழ்த்திரு வாழ்க “திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்” – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்
தமிழருமை அறியாதாரும் உளரோ
யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என் அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாகி நீயறிவித் தாலறியு நிலமுந் தானே? – பரஞ்சோதி முனிவர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: 45
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு – – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
தாய்மொழி என்பது தாயின்மொழி – அது தாயும் நீயும் பேசும்மொழி ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும் ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது அன்னையின் கருவில் வந்தமொழி! அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள் அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன் சிந்தையில் விதைகள் போட்டமொழி! தோளிலும், மார்பிலும் சாய்கையிலே – நீ தொட்டிலில் ஆடி ஓய்கையிலே ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி! அன்னையை…