கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை –  தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் மறுமொழி வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாய் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி             ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?’ என்றனள்; 25 கோமகன் மறுமொழி           `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே! துணைசெய நினைந்தே தோகை அவட்குத் துணைவன் ஆகத் துணிந்தேன்’ எனலும்,     மீண்டும் இடித்துரை           `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக்           …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை – தொடர்ச்சி பூங்கொடி 7. கடல்நகர் புக்க காதை கோமகன் துயிலாமை           மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின் அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும் பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மறாஅது தன்னை மணங்கொள வழிவகை           உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?     5 கதிரவன் எழுச்சி           இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி; மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம்          …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : தொடர்ச்சி) பூங்கொடி அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்;அடித்தனர் அவனை அருங்கேன் என்றனன்;அடித்தனர் அவனை அஞ்சேன் என்றனன்;அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்! அந்தோ அந்தோ ஆவி துறந்தனன்; 140 நொந்த அப்பிணத்தை மூடிய கல்லறைசுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான்உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்,சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின் முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்’ என் 145றுரைத்ததன் பின்னர் ஒள்ளிழை மேலும் ‘இசை, துறை வல்லாய் இரைகடல் நாப்பண்கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண்மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்;அப்பெரும் மடமை அகற்றுதல்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : குருதி சிந்தினர்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல் -தொடர்ச்சி) பூங்கொடி குருதி சிந்தினர் தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக்கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர்கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்;தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர்சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி, 115குருதி கண்டும் உறுதி குலைந்திலர்முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள்உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும்பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே! கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் 120தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர்சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்;சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ?குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்; சிறையகம் போலச் சிந்தனை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை-தொடர்ச்சி) பூங்கொடி பிறமொழி புகுதல் நம்நாட் டகத்தே ஈயமிலாப் புன்மொழிதிணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;தாய்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில்நோய்என மடமை நுழைந்து பரந்தது; 85எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றாே?என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;நெஞ்சங் கனன்றதுகன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் 90ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்நினைவர் இதுதான் நெடுநாள் இயல்பு;கனலும் புனலும் கரைமிகின் தடுக்கஉலகில் ஒருபொருள் உளதென அறியோம்; மூக்கினை வருடின்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு-தொடர்ச்சி) பூங்கொடி முத்தக் கூத்தன் கல்லறை கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும்,கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? 60மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,அதனைக் காணின் அச்சம் தொலையும்,மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்கநெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்! 65வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்குநஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், 70குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!நாடும்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி) பூங்கொடிதாமரைக்கண்ணி அறிவிப்பு கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்டகாமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கிஇருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்துதிருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறிதாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40 அல்லி அஞ்சுதல் பினஞ்சுடு…