தோழர் தியாகு எழுதுகிறார் 185 : ஊபாவின் தொடர் கொடுமைகள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!- தொடர்ச்சி) த.எ.த. (ஊபா)வின் தொடர் கொடுமைகள் வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு ப.த.(பொடா) சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்(ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளைச் சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது. 2008ஆம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!
(தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! – தொடர்ச்சி) பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களை சேர்த்து புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டி கைது செய்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வழக்குகளுக்கு வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்துச் சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!
(தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் -தொடர்ச்சி) பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! இனிய அன்பர்களே! இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act – சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த…
தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம் – தொடர்ச்சி) சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் இந்தியாவில் நாம் அடிக்கடி காணக் கூடிய ஒன்றுதான்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்கள் நல்ல பல அறிவுரைகளை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கூட வாரி வழங்குவார்கள். கண் கெட்ட பின் சூரிய நமசுக்காரம் என்பது போல் இருக்கும். இலங்கையிலும் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இந்த ‘முன்னாள்’கள் தங்கள் ‘ஞான தரிசனங்’களுக்கு ஓர் எல்லை வைத்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் இறைமைக்கும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி! தொடர்ச்சி) பாவலரேறு தொட்ட உயரம் இனிய அன்பர்களே! “என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறுஎவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!” அவர் இப்படித்தான் வாழ்ந்தார்! இப்படித்தான் இயங்கினார்! அவர்தாம் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றால் அவர்தம் எழுத்தைப் படித்தோர்க்கும் உரையைக் கேட்டோர்க்கும் உடனே நினைவுக்கு வருவது அவரது தூய தமிழ் நடைதான். தனித்தமிழ் சொல்லாட்சியில் அவரைப்…
தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி!
(தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்- தொடர்ச்சி) வேலிக்கு வேலி! இனிய அன்பர்களே! போலீசு (POLICE) என்பதைத் தமிழில் காவல்துறை என்று மொழிபெயர்க்கிறோம். காவல்துறையின் பணி “மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலை உறுதிசெய்தல், குற்றத் தடுப்பு, குற்றத் தீர்வு” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. POLICE என்ற சொல்லைச் சிலநேரம் வினைச் சொல்லாகவும் பயன்படுத்துவதுண்டு. அப்போது அதன் பொருளைச் சுருக்கி ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் ‘கண்காணித்தல்’ என்று வரும். யாரும் சட்டத்தை மீறாமல், குற்றம் செய்யாமல் கண்காணித்தல், குற்றம் நடந்து விட்டால்…
தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 179 இனிய அன்பர்களே! “முள்ளிவாய்க்காலின் முழுப்பொருள்” என்ற தலைப்பில் தாழி (201) மடலில் நான் எழுதியிருந்ததற்கு ஐயா நக்கீரன் அவர்கள் செய்திருந்த கருத்துப் பதிவுகளில் தமிழ்நாட்டு எதிலியர் குறித்த கருத்திற்கான மறுமொழியை தாழி (204) மடலில் பதிந்தேன். விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்க இந்தியா சொல்லி வரும் காரணத்தை ஐயா சுட்டிக் காட்டியிருந்தார்கள். அந்தக் காரணம் பொய் என்று எழுதியிருந்தேன். நிலப்பறிப்பு பற்றி நான் எழுதியதும் ஐயா நக்கீரன் அவர்களின் மறுமொழியும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம் தொடர்ச்சி) காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி… இனிய அன்பர்களே!அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலம் மினியாபோலிசு நகரத்தில் 2020 மே 25ஆம் நாள் நடந்த அந்நிகழ்ச்சி அமெரிக்காவைக் குலுக்கி விட்டது, ஏன், உலகையே குலுக்கி விட்டது. தளைப்படுத்தப்பட்ட சியார்சு பிளாயிடு என்ற கறுப்பின இளைஞரை வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் கழுத்துநெரித்துக் கொலை செய்ததைக் கண்டு மாந்தக் குலமே அதிர்ந்தது. “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் (BLACK L LIVES MATTER)” என்ற இயக்கம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு? -தொடர்ச்சி) இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம் இனிய அன்பர்களே! நம் இனத்தின் துயரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழினத்தின் அமைதியும் நிம்மதியும் கேள்விக்குறியாகவே நீடிக்கின்றன. இந்தோனேசியாவிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் சுட்டி நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டிலிருந்து ஈழத் தமிழர்கள் சிலர் தொலைசிபேசி வழி என்னைத் தொடர்பு கொண்டனர்: ஈழத்திலிருந்து தஞ்சம் கோரி ஆத்திரேலியாவுக்கு அவர்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 176 : எப்படி வந்தது மருத்துவக் கல்வியில் அனைத்து இந்திய ஒதுக்கீடு?
(தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாழி மடல் 153இல் வெளியிட்ட இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையில் (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர் திரு அரி பரந்தாமன் எழுதிய மடலை நேற்று தாழியில் (எண் 156) படித்திருப்பீர்கள். அதே உரையில் மேலும் ஒரு பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் எழுதியுள்ள மடலை இன்று பகிர்கிறேன். தீர்ப்புகளையும் சமூகநீதிக் குறிக்கோளின் மீது அவற்றின் தாக்கத்தையும் சரிவரப் புரிந்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை!
(தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது தொடர்ச்சி) ஓய்வு கொள்ள நேரமில்லை! இனிய அன்பர்களே! பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையத்தில் இருந்து எழுதுகிறேன். இங்கே தொலைபேசித் தொடர்பே திணறும் போது இணையத் தொடர்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நாள்தோறும் தாழி மடல் அனுப்புவதே போராட்டமாகத்தான் உள்ளது. இந்தத் திங்கட் கிழமை செய்தி அரசியல் நடத்த முடியாமற்போயிற்று. இன்று அறிவன் கிழமையில் ‘தமிழ்நாடு இனி’ அரசியல் வகுப்புக்கும் விடுமுறைதான்! எவ்வளவு இடர்ப்பாட்டிலும் அரசியல் வகுப்பை நிறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஏப்பிரல் 15 கந்தர்வக்கோட்டை அருகே…
தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது
(தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது இனிய அன்பர்களே! இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையை (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) தாழி மடல் 153இல் வெளியிட்டிருந்தேன். உங்களில் சிலராவது சற்றே நீண்ட அந்த உரையைப் படித்திருக்கக் கூடும். அந்த உரையில் காணப்படும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் திரு அரி பரந்தாமன் தாழிக்கு…
