தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ! தாெடர்ச்சி) தருசன் சோலங்கி! மீண்டும் ஒரு (உ)ரோகித் வெமுலா! உயர்கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிக்கு மீண்டும் ஓர் உயிர்ப் பலி! அகமதாபாத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட மாணவன். பெயர் தருசன் சோலங்கி. வயது பதினெட்டு. தந்தை குழாய் வேலை பார்ப்பவர்; தாய் வீட்டு வேலை செய்பவர். அரிதின் உழைத்து மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி) இல் இ.தொ. (பி.டெக்) வகுப்பில் இடம் பிடித்து விட்டார். படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் கழிந்திருந்த நிலையில் கடந்த பிப்பிரவரி 12 ஞாயிறு மதியம் விடுதிக் கட்டடத்தின் ஏழாவது…
தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ!
(தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் தாெடர்ச்சி) செந்தமிழ்க்கோ! இனிய அன்பர்களே! இனவழிப்புத் துயரத்தில் அமிழ்ந்த ஈழ மண்ணிற்கு மிக நெருக்கமான ஒரு தமிழ்நாட்டுப் புள்ளியில்… கோடியக்கரைக் கடலில் உப்புநீரில் கால் நனைத்துப் பின் கரையேறிக் கதிரொளி முதுகுதொட ஊக்கத்துடன் நெடுநடைப் பயணத்தைத் தொடங்கிய போது எங்கள் அணியில் முதல் வீரரராக இயக்கக் கொடியேந்தி நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ. யார் இந்தத் தாடிக்காரர்? எனக்கு அதுதான் அவரோடு முதல் அறிமுகமே. எங்கள் அணியில் அவர்தான்…
தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி
(தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்ச்சி) இரத்தினம் மணி தாழி குறிப்பு: வழக்கறிஞர் இரத்தினம் அன்று போலவே இன்றும் களத்தில் நிற்கிறார். 1980ஆம் ஆண்டு சென்னைச் சிறையில் என்னையும் தோழர்களையும் நேர்காண வந்த இளைஞர் இரத்தினம் இப்போதும் அதே துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். பகைவர்களையும் நண்பர்களையும் உறங்க விட மாட்டார். திண்ணியம் வழக்கைத் திறம்பட நடத்திய வழக்கறிஞர் சு.க. மணி என் கல்லூரி நண்பர், குடந்தை கல்லூரியில் அறிவியல் இளநிலையில் எனக்கு ஓராண்டு மூத்தவர். சேக்குசுபியரின் ஒதெலோ நாடகத்தின் ஒரு காட்சியை…
தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உலகத் தாய்மொழி நாள் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு!…
தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5
(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்….
தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4
(தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 நான் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு ஒரு குடியுரிமை இருந்தால், இந்தியக் குடியுரிமை இல்லை என்றாலும் நாம் தமிழ்நாட்டுக் குடியுரிமை வழங்க முடியும். இப்போது தமிழ்நாட்டில் ஏதிலியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் குடிமக்களா? அவர்கள் ஏதிலிகள் கூட இல்லை. ஏனென்றால் எதிலிகள் தொடர்பான அனைத்துலகச் சட்டத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. ஏதிலிகள் என்பதைக் கூட அங்கீகரிக்கவில்லை. அகதிகள் பற்றிய உலகச் சட்டம் எதுவுமே அவர்களுக்கு பொருந்தாது! (உ)ரோகிங்கியா முசுலிம்களுக்குப்…
தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3
(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 3 மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் இந்தச் சிக்கல் தீரும். நாம் தெருச் சண்டைகள் போட்டு இவர்களை விரட்ட முடியாது. அது சரியான நடைமுறையல்ல. இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? சாதிச் சண்டைகள், சமயச் சண்டைகளை ஊக்கப்படுத்திக் குளிர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2
(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 2 நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்; மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் காரணங்களுக்காக, வறுமையின் காரணமாக அகதிகளாக விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து செல்பவர்களுடைய கூட்டம் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பொருளியல் சூழல், பொருளியல்…
தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’ ?
(தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால் – தொடர்ச்சி) சீமான் ‘தமிழவாளரா’? திமுக ஏற்கெனவே அதற்குரிய வழியில் பாசகவை வீழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரத்தைத் தீர்மானிக்கிற வரை தேர்தல் போராட்டமும் அதில் குடியாட்சியம் பெறுகிற வெற்றியும் முகன்மையானவை. ஆர்எசுஎசு ஏவலின் படி மோதியும் அமித்துசாவும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாசக ஆட்சியை நீக்கமற நிறுவ எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சிக்குத் தடையாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சி பாசிச எதிர்ப்பு அணியில் இடம்பெறுவது ஒரு புறஞ்சார் உண்மை….
தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால்
(தோழர் தியாகு எழுதுகிறார் 124: நம்ப முடியுமா? தொடர்ச்சி) நாற்றங்கால் தாழி நூறு கண்டதை ஒட்டி வாழ்த்துக் கூறியுள்ளார் அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன்: நூறாவது மடல் பன்னூறாயிரமாகத் தொடர வாழ்த்துகள். 0 நன்றி அன்பரே! தொடர்ந்து 100 நாள் – ஒருநாள் கூட விடாமல் தாழி மடல் எழுதியுள்ளேன். தொடங்கும் போதே எடுத்துக் கொண்ட உறுதிதான்: என் இறுதி நாள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். ஒருசிலர் மட்டும்தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு சிலர் படிக்க நேரமில்லை என்கின்றனர். பிறகு படிப்பதற்காகச் சேர்த்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 124: நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் – தொடர்ச்சி) நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா? இனிய அன்பர்களே! தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திரு பழ,நெடுமாறன் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி என்னிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அஃதாவது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடனிருப்பதாக அவர் சொல்வது உண்மைதானா? என்று கேட்கின்றனர். உண்மையா? என்று தெரியாது. உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி என்பதுதான் என் விடை. பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச்சாவடைந்து விட்டார் என்று ஏற்கெனவே நான் சொல்லி வருகிறேன்….
தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002 தொடர்ச்சி) அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் அதானியுடன் தரவு மையப் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் தமிழக அரசு கையொப்பமிட்ட கடந்த காலச் செய்தி ஒன்றின் படி, அதானி என்டர்ப்பிரைசசு, எல்&டி, எசுடிடிசுடிசி,சிடிஆர்எல்எசு, பாரதி ஏர்டெல்லுக்குச் சொந்தமான நெக்சுட்டிரா ஆகிய பெருநிறுவனங்கள் தமிழக அரசுடன் தமிழ்நாட்டில் தரவு மைய மேம்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளன. தரவு மையம் (இரண்டாம் கட்டம்) எனும் இத்திட்டத்துக்காகச் சென்னையில் அதானி எண்டர்ப்பிரைசசு 2,500 கோடி உரூபாய் (336 மில்லியன் தாலர்) முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் இந்திய அரசு…
