தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! தொடர்ச்சி) புவித்தாய்க்குக் காய்ச்சல்! சூழலரண் அறிக்கையில் தோழர் சமந்தா இப்படி எழுதுகிறார்: “காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாலும், நஞ்சையே விதைத்ததாலும் நம் புவித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல இது. உயிரைப் போக்கும் நச்சுக் காய்ச்சலால் உயிர்க்கோளம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.”  புவித் தாய்க்கு அவள் பெற்ற மக்களின் செயலாலேயே காய்ச்சல் கண்டுள்ளது! அதே மக்கள்தாம் அந்தக் காய்ச்சலைத் தணிக்கவும் கடமைப்பட்டவர்கள்.    அரசியல் நெருக்கடியையும் பொருளியல்…

தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!

(தோழர் தியாகு எழுதுகிறார் 7: முனைமுகத்தே துவாலு- இன் தொடர்ச்சி) கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! ஒல்லாந்து (Holland) நாட்டின் வீரச் சிறுவன் பீட்டரின் கதை பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தில் படித்த நினைவுள்ளது. நீங்களும் படித்திருக்கலாம். அந்தச் சிறுவன் ஒரு நாள் அந்தி சாயும் நேரம் தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சியைப் பார்த்தான்: கடல்நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த அணையில் சிறிய ஓட்டை வழியாகத் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவும் வேகமும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 7 : முனைமுகத்தே துவாலு

(தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு? இன் தொடர்ச்சி) முனைமுகத்தே துவாலு காலநிலை மாற்றம் உலகை அச்சுறுத்தும் பெரும் நெருக்கடியாக முற்றி வருகிறது என்று சூழலியலர் எவ்வளவுதான் சொன்னாலும் அப்படியெல்லாம் இருக்காது என்று தன்னாறுதல் கொள்வதுதான் பாமர இயல்பு. ஆனால் பாமரரும் புறந்தள்ள முடியாத படி துவாலு நாட்டைப் பற்றிய செய்திகளால் காலநிலை மாற்றம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. துவாலு — பசிஃபிக் கடலில் அருகருகே அமைந்த ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய தீவுக் கூட்டம். இவற்றில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 5 பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும் பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்: “புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.” [கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர்,…

தோழர் தியாகு எழுதுகிறார் 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 4 இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?   இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம். ‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 3

(தோழர் தியாகு எழுதுகிறார் 2 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 3 காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும் சில ஆண்டுகள் முன்னதாகச் சூனியர் விகடனில் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதலைச் சிறப்பித்தும் அவரவர் காதல் பட்டறிவைச் சொல்லியும் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பாவலர்கள் / அரசியல் தலைவர்கள் எழுதினார்கள். குமுக நோக்கில் காதல் என்பதை மனத்திற்கொண்டு நானும் எழுதியிருந்தேன். இது காதல் பற்றிய நல்லதொரு தொகுப்பு. இது பல்வேறு காதல் பார்வைகளின் பூங்கொத்து. இந்தப் பார்வைகளில் ஒன்று: காதல்…

தோழர் தியாகு எழுதுகிறார் 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 2 காதல் விடுமையா? பாலியல் விடுமையா? கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார். இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற  [அல்லது நம்மைப் போன்ற?]…

தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21.அ.): மாவீரர்களின் பெயரால்…

தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21. அ.): மாவீரர்களின் பெயரால்… ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும்…