மகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி

 மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 5.00 இளையோர் இந்தியக் கழகமும் நந்தவனம் நிறுவமும் நிகழ்த்தும் மகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி

“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம், திருச்சிராப்பள்ளி

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. எதிர்வரும் மாசி 15, 2048 _ 27/02/2017 அன்று  தமிழ்த்துறையில் “ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிட்சர்லாந்து

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா   நந்தவனம்  நிறுவம், திருக்குறள் கல்வி மையம், கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் இணைந்து மலேசியா முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.இராமன் அவர்களுக்கான பாராட்டு விழாவைத் திருச்சிராப்பள்ளியில் சிறப்பாக  நடத்தின.   திருக்குறள் கல்வி மையத்தலைவர் சு.முருகானந்தம் தலைமையில் எழுத்தாளர் மழபாடி இராசாராம் முன்னிலையில்  இவ்விழா நடைபெற்றது.   நந்தவனம் சந்திரசேகரன், கப்பல் கவிஞர் கிருட்டிணமூர்த்தி சூரியக்குமார்,  புலவர் தியாகசாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.    முன்னதாகக் கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தலைவர் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.   …

பேராசிரியர் மாணவர்களுக்கான சிறப்புச்சொற்பொழிவு, திருச்சிராப்பள்ளி

கார்த்திகை 20, 2047 / திசம்பர் 05, 2016 காலை 9.30 ஈபெர்  பாதிரியார் (Bishop Heber) கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத் துறை  நடத்தும் பேராசிரியர்கள் – மாணவர்களுக்கான சிறப்புச்சொற்பொழிவு முனைவர் இரா.விசயராணி முனைவர் சி.வளர்மதி பேரா.முனைவர் மு.செம்மல் முனைவர் சா. சாம் கிதியோன்

குழந்தை இலக்கிய விருதாளர்களுக்கு நந்தவனத்தின் பாராட்டு

கார்த்திகை 11, 2047  / நவம்பர் 26, 2016 திருச்சிராப்பள்ளி நந்தவனம் நிறுவனம் கோவிந்தம்மாள் தமிழ் மன்றம்

திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம்

  திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம் ஆனி 05, 2047 / சூன் 19, 2016 சிறப்புப்பொழிவு : தொல்காப்பியச் சான்றோர்  பேரா. இ.சூசை தலைப்பு  : தொல்காப்பிய வாழ்வியல்

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சியில்  மாபெரும் மாநாடு  6 கட்சித் தலைவர்கள்  உரையாற்றினர். மக்கள் நலக்கூட்டணி:   நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் அமைக்கப்பெற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றது. வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.   கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விசயகாந்து,  தலைமையில்  மாநாடு நடைபெற்றது.   ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர்  இராமகிருட்டிணன், இந்தியப் பொதுவுடைமைக்  கட்சியின் மாநிலச்…

மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். – வைகோ

”மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்” – வைகோ   திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக மாறிமாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி செய்து விட்டு, அவர்களுக்குள் ஒருவரையொருவர் குற்றஞ் சொல்லி வருகின்றனர். இரு கட்சிகளின் அரசியலை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி…

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்! வைகோ அழைப்பு  தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு  நடைபெறுகிறது.   இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.   இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  மாற்று அரசியல் வெற்றி…

திருச்சிராப்பள்ளியில் திருக்குறள் திருவிழா

சித்திரை 18, 2017 /  மே 01, 2016 [பி.கு.  பல அழைப்பிதழ்களில் நாளும் இடமும் தெளிவாக இருப்பதில்லை. அழைப்பிதழைச் சற்றுப் பெரியதாக அடித்திருந்தால் விவரங்கள் தெளிவாக இருக்குமே!]