தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் திருச்சி!

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது திருச்சிராப்பள்ளி!   இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிராப்பள்ளி மாநகரம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த திருச்சிராப்பள்ளி தற்பொழுது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கருநாடகத்தின் மைசூர் நகரம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.   தூய்மையான நகரங்கள் குறித்து இந்தியத் தர ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளை நடுவண் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய(நாயுடு) இன்று வெளியிட்டார்.   அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில்…

தொல்லியல் ஆய்வுமையம் – நூல் வெளியீடும் பாராட்டரங்கமும் கருத்தரங்கமும்

  மாசி 09, 2047 / 21.02.2016 காலை 10.00 – மாலை 5.00 திருச்சிராப்பள்ளி கீழ்வாலைப் பாறைஓவியங்களின் மருமங்கள் – ஆங்கில நூல் வெளியீடு  

பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை

காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம்.   தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும்   உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…

கலித்தொகையின் கவின்மிகு சிந்தனை – இ. சூசை

  இளங்காலைப் பொழுதில் சுறுசுறுப்புடன் இயங்கும் வானொலி நேயர்களே! வணக்கம். நம் முன்னோர்கள் காதல் இலக்கியங்களில் கூட அறம் உணர்த்திய ஆன்றோர்கள் ஆவர். கலித்தொகை என்ற கவின்மிகு இலக்கியத்தில் இதனை நுகர முடிகிறது. தலைவன் பொருளுக்காகப் பிரிந்து செல்கிறான். தலைவி வாடுகிறாள். அப்போது தோழி சொல்கிறாள். “இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு” ஒரு ஆண்மகனிடம், “இல்லை! ஈகை செய்யுங்கள்” எனக் கேட்கும்போது அவன் “இல்லை” என வறுமையில் வாடுவது அவனுக்கு இழிவு. உன் தலைவன் உழைத்துப் பொருள் ஈட்டட்டும் என்கிறாள். “இடன்…

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர்

ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 மாலை 5.30 கி.வெங்கட்ராமன் பெ.மணியரசன் தமிழ்த்தேசியப் பேரியக்கம்  திருச்சிராப்பள்ளி

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014    தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை…

சிலப்பதிகார விழா – கருத்தரங்கம்

ஆனி 13, 2046 / சூன் 28, 2015  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மருதம் அரங்கு,  திருச்சிராப்பள்ளி தென்னகக் கலை இலக்கிய வளர்ச்சிக் குழு