மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 42
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. — திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 40 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள். அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 40
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 39 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் ‘தமிழ்’ என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன. அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 39
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 38 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்15 “மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்லமாதவம் செய்திடல் வேண்டும் அம்மாபங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்பாரில் அறங்கள் வளரும், அம்மா!” — கவிமணி பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான். “திரைப்படத்தில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 38
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 37 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி “வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசௌகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 37
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 36 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி தனக்குச் சமயம் நேர்ந்த போதெல்லாம் உதவியிருக்கும் அந்தத் தாய்க்குத் தான் ஆறுதல் சொல்லி உதவி பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டிய சமயத்தில் தன் துன்பத்திற்கு ஆறுதல் தேட விரும்பவில்லை அவள். வசந்தாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க அரவிந்தனின் உதவியை நாடலாம் என்றுதான் அந்த அம்மாளையும் அழைத்துக் கொண்டு உடனே அச்சகத்துக்கு வந்தாள் அவள். நல்லவேளையாக அந்த நேரத்துக்கு முருகானந்தம் அங்கு இருக்கவே அவளுடைய வேலை எளிதாகப் போயிற்று. இப்போது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 36
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 35 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி “விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை” என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். “காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீசு இலாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு இலாரியில் ஏறிவிட்டான்” என்று முருகானந்தம் கூறியதும் “அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?” என்று…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 35
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 34 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி அச்சகத்தில் வலது பக்கம் ஓர் உணவுவிடுதி, இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் உணவுவிடுதிக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. உணவுவிடுதியின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 34
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 33 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அதிகாரம் 13 தொடர்ச்சி “கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்.” சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. “காலி புரூஃபில்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 33
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 13 பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ? — குண்டலகேசி வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில்…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 126. அனைய திருப்பதிகம்உடன் அன்பு உறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவுஅரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார். –பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 173 127 & 128. அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ் உலகும் விளங்கிய…
காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 101-125
– இலக்குவனார் திருவள்ளுவன் 101. இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ? தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – பெரியபுராணம்: 2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்: 2. தில்லை வாழ் அந்தணர் நாயனார் புராணம்: 9 102. ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும். – பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி…