திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 23 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 23 கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:390) உழைக்க வாய்ப்பில்லாதவர்க்குக் கொடுத்தலும் யாவரிடமும் அருள் உள்ளத்துடன் நடந்து கொள்ளலும் செங்கோலாட்சி புரிதலும் மக்களைக் காத்தலும் ஆகிய செயலாற்றும் வேந்தன் பிறருக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்வான் என்கிறார் திருவள்ளுவர். புரூசி பியூனொ…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 22 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  22 செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:389)  குறைகூறப்படும் கசப்பான சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு உடைய ஆட்சியாளன் குடையின் கீழ் உலகம் தங்கும் என்கிறார் திருவள்ளுவர். அரசறிவியலாளர்கள், ஆட்சியாளர் மக்கள் குறைகளைப் பொறுமையுடன் கேட்க வேண்டும் என்கின்றனர். அதையே…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 21 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

  திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  21   முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:388)  அறமுறை ஆட்சியால் மக்களைக் காப்பாற்றும் நாட்டின் தலைவன் மக்களால் உயர்ந்தோனாக மதிக்கப்பட்டுப் போற்றப்படுவான்  என்கிறார் திருவள்ளுவர். அரசறிவியல்,  நீதிமுறைசெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது நாட்டை ஆள்வோர் கடமை என்கிறது….

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 20 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   20 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 387) இன்சொல் கூறி ஈதலைச் செய்யும் வல்லமையாளர் சொற்படி உலகம் நடக்கும் என்கிறார் திருவள்ளுவர். உதவுவதை விட முதன்மையானது அதனை இன்முகத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். வேண்டா விருப்பாகக் கோடி…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 19 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 19 காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 386) அணுகுவதற்கு எளியவனாகவும் கடுஞ்சொல்லற்றவனாகவும் உள்ளவனை உலகம் உயர்த்திப் போற்றும் என்கிறார் திருவள்ளுவர். மீக்கூறுதல் என்பதற்குப் பரிமேலழகர், “ ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 385) செல்வம் திரட்டுதவற்கான வழிவகைகளை உருவாக்கியும் தொகுத்தும் காத்தும் பகுத்து வழங்கலும் வல்லது அரசு என்கிறார் திருவள்ளுவர். இன்றைய நிதியியல் கூறும் கருத்தினை அன்றே திருவள்ளுவர் சொல்லி உள்ளார். இயற்றலும் ஈட்டலும் என்பதற்குப் பேரா.சி.இலக்குவனார், “ஒரு நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு உடையதாக இருக்க முடியாது.ஆதலின் என்னென்ன நம் நாட்டில் இல்லை? உண்டுபண்ண முடியாது என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து, இல்லாதவற்றை எந்தெந்த…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)   அறநெறியில் தவறாமல், அறம் அல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாமல், மானம் உடையவனே சிறந்த அரசன் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்கள், அதிகாரம் குவிந்துள்ளதால் அறநெறியில் இருந்து விலகி வாழக்கூடாது என்கிறார். தமிழ்நெறி என்பது அரசும் அறநெறியில் நடக்க வேண்டும் என்பதே. சங்கப்புலவர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். அறம் நனி சிறக்க; அல்லது கெடுக! எனப் புலவர் ஓரம்போகியார் (ஐங்குறுநூறு 7) கூறுகிறார்….

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 16 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்  16  தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)  ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 15 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   15 அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)   அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 14 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 14 படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்:381) திருவள்ளுவர் திருக்குறளில் அளித்துள்ள பொருட்பால் முழுமையுமே அரசறிவியலைச் சார்ந்ததுதான். அரசியல் அறிவியல் என்பதைச் சுருக்கி அரசறிவியல் என்பதே சிறப்பாகும். பொருள்நீதி என்றும் ஆட்சியியல் என்றும் சொல்லப்படுவனவும் இதுவே ஆகும்.  சாக்கிரட்டீசு, பிளேட்டோ…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 13 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 13 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 340) “உடம்பினுள் ஒதுங்கி யிருக்கும் உயிருக்கு நிலையான  இருப்பிடம் அமையவில்லையோ?” என வனவுகிறார் திருவள்ளுவர். தங்குமிடம் நிலையற்றது என்பதன் மூலம் உயிரும் நிலையற்றது என்கிறார் திருவள்ளுவர். “துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதற்கு நோய்கள்/நோயுயுரிகள் குடிகொண்டுள்ள உடலில் ஓரமாக உள்ள…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 12 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 12 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 338) கூட்டிற்கும் அக்கூட்டில் இருந்து அதைத் தனித்துவிட்டுப் பறந்து செல்லும் பறவைக்கும் உள்ள தொடர்புதான் உடலுக்கும் உயிருக்கும் என்கிறார் திருவள்ளுவர். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள சமயவாதிகள் உடலிலுள்ள உயிர் குறித்து மீண்டும் வேறு உடலில் புகும் என்பதுபோன்ற…