எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளைத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை நமக்குத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்   திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை, கி.மு. முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட முதுபெரும் படைப்பாகும். அதனில், உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உரைக்கப்பட்ட கருத்துகள் இன்றளவும் மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளாக விளங்கி வருவது கண்கூடு. வள்ளுவர் தனது நூலினை அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பிரித்து மக்களுக்கு இக்காலத்திற்கும், பிற்காலத்திற்கும், ஏன், நம்பிக்கை இருக்குமெனின் மேலுலக வாழ்க்கைக்குமெனப் பல்வேறு கருத்துகளை வழிகாட்டு நெறிகளாய், வாழ்வியல் முறைகளாய் வகுத்தளித்துள்ளார். 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள்…

உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார் – பெ.(உ)லோகநாதன்

உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.   மனித வாழ்வின் நோக்கமே உயர்தல், உயர்நிலை அடைதல். இவ் இலக்குகள் தனி மனிதனுக்குப் பொருந்துவது போன்றே குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனிமனித இலக்கு அடையப் பெற்றால் குழுவின் இலக்கோ நிறுவனத்தின் இலக்கோ அடைவது எளிது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் தனிமனித இலக்கினை அடைய முடியும் என்ற எண்ணமே குழு இலக்கு அல்லது நிறுவன இலக்கினை அடையப் போதிய உந்து விசையாக ஊக்கியாகச் செயல்படுகிறது. பொதுவாக, உயர்நிலை பெறும் அல்லது அடையும் வகையினை வள்ளுவர் தனது…

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும்  ‘நயன்’ என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்துதான் [நயன் > நயதி > நியதி >] நீதி  என்னும் சொல் பிறந்துள்ளது. எனவே, நீதி என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து கையாள்வோம். ‘பதி’ என்பது தங்குமிடத்தையும் தலைவனையும்  வேறு சில பொருள்களையும் குறிக்கும். நீதி தங்கியிருக்க வேண்டிய இடம் என்னும் பொருளிலும் நீதி வழங்கும் மன்றத்தின் தலைவன்  என்ற முறையிலும்  முறைமன்றத்தின் தலைவர் நீதிபதி  எனப்படுகிறார். எனவே, நீதிபதியும் தமிழ்ச்சொல்லே!   நீதிபதியைத் தமிழ்ச்சொல்லல்ல எனக் கருதியும் ‘justice’ …

நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே!   சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)   மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல்  நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார். எனவேதான், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி  3.1) என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி.   “கற்றது கைம்மண்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33:   புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன் அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார்.   மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம் கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல்…

காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்!     காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி…

திருக்குறள் ஒப்புயவர்வற்ற நூல் – க.த.திருநாவுக்கரசு

திருக்குறள் ஒப்புயவர்வற்ற நூல்   திருக்குறள், மனிதன் ஒவ்வொருவனும் அடைய வேண்டிய குறிக்கோள் மட்டும் நன்மை பயப்பதாக இருந்தால் போதாது; அதை அடைவதற்கு அவன்மேற்கொள்ளும் செயல்முறைகளும் தூய்மையானவையாகவும் சிறந்தனவாகவும் இருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தும் ஒப்புயவர்வற்ற நூலாகும். திருக்குறள் மணி க.த.திருநாவுக்கரசு: ஒளிவிளக்கு: பக்கம்.15

திருவள்ளுவர் முதல் புரட்சியாளர் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர்  முதல் புரட்சியாளர்     கி.மு.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர், அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்களின் பழைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாவற்றையும் களைந்தெறிய அறிவுரை கூறியுள்ளார்.   புரட்சி என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூடநம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயலுவதே ஆகும். பழமையைப் புரட்டிவிட்டு அகற்றிவிட்டு புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி…

மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன – க.த.திருநாவுக்கரசு

மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன “தனது உயிரைக் காக்கவும் தன்னைச் சார்ந்தவர்கள் உயிரைக் காக்கவும் வன்முறைச் செயல்களில் ஒருவன் ஈடுபடலாம்” (8: 347350) எனவும், மூன்று நாள்கள் பட்டினி கிடப்பவன் மறுநாளைக்கும் அதே நிலைதான் என்பதை அறிந்தால், அவன் திருடலாம்” (11:16) எனவும் மனுஉரிமை அளிக்கின்றார். ஆனால், திருவள்ளுவரோ, “தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்?’ என வினவுவதோடு நிற்காமல், “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்செய்யற்க. சான்றோர் பழிக்கும் வினை’ என அறிவுறுத்துகின்றார். இத்தகைய அடிப்படைக் கொள்கை…

திருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் – தமிழண்ணல்

திருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும்   திருவள்ளுவர் தனிமனித முன்னேற்றமே பெரிதும் சமுதாய முன்னேற்றம் என்று கருதுகிறார். அதனால், பெரும்பாலான குறள்கள் தனி மனிதனை நோக்கியன எனக் கருத இடந்தருகின்றன. ஒவ்வொரு மனிதன் பக்கத்திலும் நின்று தாயாய், தந்தையாய், அண்ணனாய், ஆசானாய், அறநெறி காட்டுகிறார். அவனவன் நிலைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் தட்டிக் கொடுத்து “முயல்க முன்னேறுக’ என அவர் கூறும் நெறிமுறைகள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்ச்செம்மல் தமிழண்ணல்: வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் – கா.பொ.இரத்தினம்

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் “கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுகள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் “உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது. யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான். -தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்

திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை – கா.பொ. இரத்தினம்

திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை   பல துறைகளிலும் மனிதனை மனிதனாக வாழ – பிறர் உதவியின்றி வாழ –  தனக்கும் பிறருக்கும் பயன்பட – வழிகாட்டிய தனிச்சிறப்பினாலே தமிழ்மறையை (திருக்குறளை) யாவரும் போற்றத் தொடங்கினர். பிற நாட்டு மக்களும் இதன் பெருமையை அறிந்தவுடன் தம்முடைய மொழிகளிலே மொழி பெயர்த்துத் தம் மக்களும் பயனடையச் செய்கின்றனர். மக்கள் யாவரையும் முழு மனிதராக்கும் தமிழ் மறையைப் போன்று சிறந்தோங்கும் இலக்கிய நூல் இவ்வுலகில் வேறொன்று மில்லை. தமிழ்மறைக் காவலர் கா.பொ. இரத்தினம்