நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27: தீயன விலக நல்லோரைச் சார்க! அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வு – நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. நாலடியார் பாடல் 171 [அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகிய(வ்)வும் – நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே புல் பனி பற்று விட்டு ஆங்கு.] பொருளுரை: ⁠ அறியாப் பருவத்தில்…

குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! மனநலத்தி னாகு மறுமைமற் றஃது      மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459) [ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ] மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும். பதவுரை:     மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்;…

கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 24 இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 தொடர்ச்சி) கொல்லும் சொல் : ‘மாடல்’ தி.மு.க.தலைவருக்கு ஆங்கில மோகம் உள்ளது அனைவரும் அறிந்ததே! “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” எனப் பேசி வந்தாலும் ஆங்கிலச்சொல் அறிமுகமானால் அதைத்தான் பயன்படுத்துபவர். விளம்பரங்களிலும் புதிய திட்ட முழக்கங்களிலும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதும் அறிந்ததே. நாம் இதனைப் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவற்றைக் கேட்டுக் கொண்டாலும் திராவிட மாடல் பெயர்ப் பற்று அவரை விட்டுப் போகவில்லை. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.  …

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32  – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33 பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! *** தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து  கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து : 22 அடிகள் 5 – 10 (பாடலின் மொத்த…

குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 45. இன நலமே பாதுகாப்பு! மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458) மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது. பதவுரை: மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது. கருத்துரைகள் மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு…

நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 28. பெரியோரைப் பிணித்துக் கொள்க! அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. – நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173 [அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரைஉறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.] கருத்துரை: அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு…

நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…

குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 44 புகழைத் தருவது நற்றுணையே! மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457) மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே! பதவுரை: மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம்,…

நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – இலக்குவனார்திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – தொடர்ச்சி) நாலடி நல்கும்நன்னெறி 26 வறுமையிலும் உதவுக! உறுபுனல் தந்துலகூட்டி அறுமிடத்தும்கல்லூற்றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்செய்வர் செயற்பாலவை. நாலடியார் பாடல் 185 பொருளுரை: மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மிகுதியான நீரை உலகமக்களுக்குக் கொடுத்து  உண்பிக்கும் ஆறு. கோடைக்காலத்தில் நீரற்றுபோனாலும்   ஊற்றுக்குழியைத் தோண்டுவோருக்கு, நீர்சுரந்து உதவிசெய்யும். இத்தகைய ஆற்றைப்போலப், பெரியோர் தம்செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து உதவுவர். அவர்கள் வறுமை நேரிட்டாலும்  தம்மால் இயலும் அளவு…

இளங்கோ அடிகள் புத்தாண்டு விழா ; நூலரங்கம்: தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். (திருக்குறள், ௬௱௪௰௬ – 646)                                                தமிழே விழி!                        தமிழா விழி!                  தமிழ்க்காப்புக்கழகம் இணையவழியில் இளங்கோவடிகள் புத்தாண்டு விழா ஆய்வரங்கம் நாள்: பங்குனி 29, 2057 ஞாயிறு 12.04.2026 காலை 10.00 மணி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன் தலைமையும் நூலாய்வும்:  இலக்குவனார் திருவள்ளுவன் கவியரங்கம்…

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.         – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…

பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்

பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்     கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.    அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல…

1 2 19