ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்- இணைய அரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: மாசி 27, 2055 / 10.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம் இணைய அரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தொடர்பொழிவுச் செம்மல் முனைவர் முகிலை இராசபாண்டியன்…
என்னூல் திறனரங்கம் 3 : ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்’
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414) மலர்க்கொடி வெளியீட்டகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க்காப்புக் கழகம் என்னூல் திறனரங்கம் 3 இலக்குவனார் திருவள்ளுவனின் ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’ நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரும் ஞாயிறு தை 22/05.02.2053 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா…
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல் – 316
தை 06, 2054 / சனவரி 20, வெள்ளிக்கிழமை… இந்திய நேரம் மாலை 8:00 மணி.. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல் – 316 இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான “அறியப்பட வேண்டிய தமிழகம்” நூல் திறனாய்வு – கலந்துரையாடல் நூல் திறனாய்வாளர்: திரு. இரா. முத்து கணேசு முதுகலை வேதியியல் ஆசிரியர் நாடார் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி “அறியப்பட வேண்டிய தமிழகம்” – தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து…
சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 3/3
(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 2/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு 1) காற்று: உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு, ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர்கள் வைத்தனர். காற்று அங்கும் இங்கும் அசைவதால் ‘சலனம்’ எனப்பட்டது. உலவியதால் ‘உலவை’ எனப்பட்டது. வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை எனப்பட்டது. அது வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவதால் அது மேல் காற்று, எனப்பட்டது. அது கோடைகிழக்கே…
சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 2/3
(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 1/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு சொற் சிக்கனம் என்பது மொழிக்குச் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கும் கட்டுரையாளர், ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு பொருளை மட்டும் விளக்கும் வகையிலும் பிற துறைகளில் வெவ்வேறு பொருளை விளக்கும் வகையிலும் அமையலாம். அதேநேரம் ஒரு துறையில் ஒரு சொல்லே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளும் நிலை இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Post என்னும் சொல் light post என்னும்…
சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 1/3 – புதேரி தானப்பன்
“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது கலைச் சொற்கள் தொடர்பான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்லுகிறது என்பதைச் சொல்லும் கட்டுரையாக ‘முன்னுரை’ என்னும் முதற் கட்டுரை அமைந்துள்ளது. இக் கட்டுரைகள் யாவும் கலைச் சொற்கள் தொடர்பானவையே. எனினும் இந்நூல் கலைச் சொற்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல் அல்ல. ஆயினும் கலைச் சொற்கள் குறித்த…
மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் – வல்லிக்கண்ணன்
மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் வல்லிக்கண்ணன் சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த சிறப்புகளும் கொண்டதாக அமைகின்றன. வாழ்க்கையையும் மனிதர்களையும்பற்றிய தனித்த நோக்கு, வாழ்க்கையும் சூழ்நிலையும் பட்டறிவுகளும், மனசில் ஏற்படுத்துகின்ற சலனங்களும் பதிவுகளும், வாழ்க்கை, மனிதர்கள் இயற்கைச் சூழ்நிலைகள் மரங்கள், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைத்திலும் ஒருவர் கொள்கிற பற்றுதலும்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார். தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார். நம் நாட்டு நாடகத்தை…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 பாலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப் பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப்போல அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம் சாலபெரும் நல்லோரும் அல்ல! பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று! என்னென்பேன்! இது பெரிய வெட்கக்கேடு! வானகமே மழை நீரைப் பருகிவிட்டு வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…