தேனிப் பகுதியில் தொடர்மழையால் விலைகுறைந்த மக்காச்சோளம்

    தேனிப்பகுதியில் தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது.     வானம் மாரி நிலம் என்பதே வானாமாரி எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது.  நாளடைவில் மானவாரி நிலங்கள் என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது வானத்திலிருந்து விழுகின்ற மழைநீரை மட்டும் நேரடி நீர் ஆதாரமாகக் கொண்டு வேளாண்மை செய்யப்படுகின்ற பகுதிகளை மக்கள் வானம் பார்த்த பூமி என அழைக்கின்றனர்.  இவ்வகை மானவாரி நிலங்கள் மேட்டு நிலங்கள், தரைப்பகுதி நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளன. அதாவது  மலைஅடிவாரம், காடுகள் சார்ந்த நிலப்பகுதிகள் கரட்டுக்காடுகள் அல்லது…

தேனிப்பகுதியில் கூடுதலான கம்பிவடக் கட்டணம்

தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலான கம்பிவடக் கட்டணம் தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் பெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த தி.மு.க.ஆட்சியில் கம்பிவடக் கட்டணத்தைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வரையறுத்து அடாவடியில் ஈடுபட்டனர். தமிழக அரசு, அதன் பின்னர் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கி நுகர்வோர்களிடம் உரூ.70 மட்டுமே பெறவேண்டும் என வரையறுத்தது. அந்த அரசு அறிவிப்பு வந்தவுடன் அரசு வரையறுத்த கட்டணத்தைப் பெற்றனர். ஆனால், இப்பொழுது அரசு வரையறுத்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாகப் பெறுகின்றனர்….

தேனிப் பகுதியில் தீயொழுக்கப் படம் எடுக்கும் மருமக்கும்பல்

தேவதானப்பட்டிப் பகுதியில் அலைபேசி மூலம் தீயொழுக்கப் படம் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.   தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, வைகை அணை முதலான அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் திறந்துவிடப்பட்டன.  இப்பகுதியில் வாய்க்கால், கண்மாய்கள், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் துணிகளைத் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஆறுகள், வாய்க்காலைப் பயன்படுத்தி வருகின்றனர்.   இதனை நோட்டமிடும் மன்மதன்கள் குளிக்கின்ற காட்சிகளைத் தங்கள் அலைபேசிகள் மூலம் ஒளிப்படம் எடுத்தும் காட்சிப்படம் எடுத்தும் இணைய மையங்களுக்கு…

தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தண்ணீர் தனியாருக்கு விற்பனை

தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீர், தனியார் தோப்புகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்குச் சொந்தமாகக் கிணறு உள்ளது. இக்கிணறுகள் மூலம் பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீரைத் தனியார் தோட்டங்களுக்கு மணிக்கு இவ்வளவு உரூபாய் என வரையறுத்து விற்பனை செய்துவருகின்றனர். தண்ணீரைத் தொட்டியில் நிரப்பியவுடன் அந்தத்தண்ணீரை கால்வாய் மூலம் அருகில்…

தேனிப் பகுதியில் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் குளத்தைத் திறந்துவிடும் அவலம்

    தேனிப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன.   அவற்றில் இயற்கையாகப் பெய்த மழையாலும் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை போன்றவை திறக்கப்பட்டமையாலும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இப்போது ஒவ்வோர் ஊராட்சியிலும் குளங்களில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். மீன்கள் வெளியே சென்றுவிடாமல் தடுக்க இரவு பகலாகக் குளங்களில் காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் குளம் முற்றிலும் நிரம்பிய பிறகுதான் உழவிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால் சில ஊராட்சித்தலைவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, இரவோடு இரவாக மீன் வளர்ப்பதற்காகக் குளங்களைத் திறந்துவிடுகின்றனர்….

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் இயற்கையாக உருவான ஊற்றுகள்

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் ஆறாக மாறும் ஊற்றுகள் தேனி அருகே உள்ள மலைப்பகுதியில் இயற்கையாக ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாகப் பாய்கின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியல் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் தலையாறு அருவி, வறட்டாறு, மூலையாறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள டம்டம்பாறை செல்லுகின்ற வழியில் ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாக ஓடுகின்றன. மலையில் வெள்ளிகளை உருக்கி வார்த்தாற்போல் இக்காட்சி அமைந்துள்ளது. அப்பகுதியில் செல்லுபவர்கள் இதனைக்கண்டும் களித்தும் ஒளிப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த இயற்கையான…

தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்

  தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நீர்நிலைகள் கிணறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தும் காய்ந்து கிடந்தன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென சரியத்துவங்கியது. இதனால் பல கிணறுகள் நீரின்றி காய்ந்து போயின. சில கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.   தேவதானப்பட்டி பகுதியில் 10 அடி முதல் 20 அடிவரை தண்ணீர் தாராளமாக கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் ஆழ்துளைக்கிணறுகள் 200 அடிவரை…

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறும் மக்கள்

    தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறி இப்பகுதி மக்கள் செயல்படுகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை உள்ளது. மூலையாறு, தலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரைத்தேக்கி மஞ்சளாறு அணையாகக் கட்டப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் கொள்ளளவு 57 அடியாகும். தற்பொழுது மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் தேவைக்காகவும், பாசனவசதிக்காகவும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் வரத்து அதிகமாக…

தேனிப் பகுதியில் தொடர்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனிப்பகுதியில் பகுதியில் தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டிப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டும் சில இடங்களில் விடாமல் தொடர்ந்தும் மழை பெய்துவருகிறது. இதனால் சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் பண்டிகைக்காலத்தில் யாரும் வெளியே தலைகாட்டமுடியாத அளவிற்கு மழை பொழிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல்

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல் தேனி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், வடுகப்பட்டி, குன்னூர், உத்தமபாளையம் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல் கடத்தல் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மழை பொழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் மணல் அதிகமாக வருகிறது. இதனைப்பயன்படுத்திப் பொறிஉழுவை, மாட்டுவண்டிகளில், மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டுவண்டி ஒரு வண்டி மணல் உரூ.600க்கும் உழுவைகளில் மணல் உரூ.2000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வருவாய்த்துறை…

விளைச்சல் நிலம் குறைந்ததால் விற்பனைக்கு அனுப்பபடும் கால்நடைகள்

தேனிப் பகுதியில் விளைச்சல் நிலங்கள் குறைந்ததால் நல்ல நிலையுள்ள மாடுகள் அடிமாட்டிற்காகக் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் வற்றியும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நீரின்றி வறண்டும் காணப்பட்டன. இதனால் கால்நடைகளான ஆடு மாடுகளின் மேய்ச்சல் பரப்பு குறைந்தது. இதனால் உழவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தை வாங்கிக்கொடுக்க முடியாமல் தவித்தனர். மேலும் கால்நடைத் தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வைக்கோல், தீவனப்புல் போன்றவை கிடைப்பது அரிதானது. இதனால்…

தேனி மாவட்டத்தில்; தொடர்மழையால் செங்கல் தொழில் பாதிப்பு

தேனிப் பகுதியில் தொடர்மழை காரணமாகச் செங்கல் செய்யும் தொழில் பாதிப்படைந்துள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, இலெட்சுமிபுரம், குன்னூர் முதலான பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலை உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் திருச்சி, கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. செங்கல் தயாரிக்க தனியாகச் சேலம், தருமபுரி பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வந்து செங்கல் தொழிலை நடத்துகின்றனர். மேலும் செங்கல் தொழிலுக்கு மூலதனமாக மண், மணல், விறகு போன்றவை வாங்கி எரிப்பதில் பல விதக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை,…