தேனிப் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருட்டு

தேனி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இக்காலம் கோயில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா என எந்த விழாவாக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் கோயில்திருவிழாவின்போது வண்ண வண்ண விளக்குகள், சாலையோரம் குழல்விளக்குகள் போன்றவை கட்டப்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுகிறது….

அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)

தனியார் பள்ளிப்பேருந்துகளில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும்   கண்டம் உள்ளது.   தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.   தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச்…

தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி பகுதிகளில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் இடர்ப்படுகின்றனர். தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 22 ஆம்நாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பலகாரம் செய்யும் பணியை வீடுகளில் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாகத் திருமணம் ஆன இணையர்களுக்குத் தாய்வீட்டிலிருந்து இனிப்பு வகைகள் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதற்கு தாலநெய்(பாமாயில்) இன்றியமையாது வேண்டப்படும். ரேசன்கடைகளில் கடந்த சில மாதங்களாகத் தாலநெய்(பாமாயில்)…

விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு

தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு-மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. தேனிப் பகுதியில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செயமங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகைஅணை, மேல்மங்கலம் பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், திண்காரை(சிமிண்ட்டு) நிறுவனங்கள், தனியார் துணிக்கடைகள், தனியார் நகைக்கடைகள் ஆகியவை பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்களிடம் எந்த வித உரிமமும் பெறாமல், அரசிற்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் விளம்பரங்கள் செய்கின்றனர். மேலும் கண்ணைக் கவரும் வகையில்…

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை உயர்வு

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், செயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இப்பொழுது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் புதுமணத்தம்பதிகள் தலைதீபாவளிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தலை தீபாவளி, திருவிழாக்கள் இணைந்து வருவதால் நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்துள்ளது.   கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தனர். அதன் பின்னர் இறைச்சிக் கோழி வருகையால் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தது.   இந்நிலையில் தற்பொழுது தென்னந்தோப்புகளிலும், பண்ணை வயல்களிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து…

குறுங்காலப் பயிருக்கு மாறும் தேனி

      தேவதானப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றிவருவதால் குறுகிய காலப்பயிர்த் தொழிலுக்கு உழவர்கள் மாறத் தொடங்கிவிட்டனர்.   தேவதானப்பட்டி பகுதியில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, வாழை, நெல் போன்றவை நடப்பட்டு வேளாண்மை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசுமை விரித்தாற்போல நெல்வயல்களும், வாழை மற்றும் கரும்பு விவசாயமும் நடைபெற்று வந்தது. இதனால் இப்பகுதியில் விளையும் பொருட்கள் தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.    கடந்த மூன்று வருடங்களாகத் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய மழைகள் பொய்த்துவருகின்றன. இதனால்…

தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை

தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். மழை பொழியும் நேரத்தில் இடி இடித்தால் இயற்கையாகவே காளான்கள் வெளிவரத் தொடங்கும். இதில் பேய்க்காளான், வெண்மை நிறக்காளான் என இரண்டு வகைப்படும். வெண்மை நிறக்காளான்கள் மருத்துவகுணம் உடையது. மேலும் சைவப்பிரியர்கள் அசைவம் சாப்பிட்டதைப்போன்று உணரும் தன்மை உடையது, இக்காளான்கள் அரிதாகத்தான் கிடைக்கும். மேலும் இடிஇடிக்கும்போது பூமியிலிருந்து தானாகவே வளரும் தன்மை உடையது. தற்பொழுது இடி மின்னலுடன் கூடிய மழை பொழிவதால் தென்னந்தோப்புகள், வயல் வெளிகளில் காளான்கள் தன்னியல்பில் முளைத்து வருகின்றன. தோட்ட…

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் (பக்கிரீத்து) கொண்டாட்டம்

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் கொண்டாடப்பட்டது. தேவதானப்பட்டி பகுதியில் ஈகைத்திருநாளை முன்னிட்டுத் தத்தம் வசதிக்கேற்ப ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அறுத்துப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பள்ளிவாசல்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் குள்ளப்புரம் பள்ளிவாசலிலும், செயமங்கலத்தில் செயமங்கலம் பள்ளிவாசலிலும், பொம்மிநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள இசுலாமியர்கள் ஈகைத்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவை தவிர தமிழ்நாடு தவுஃகித்து சமாத்து அமைப்பினர் 7.30 மணிக்கே ஈகைத்திருநாளைக் கொண்டாடினார்கள். மற்ற பள்ளிவாசல்களில் 9.00 மணிமுதல் 9.30 மணிவரை ஈகைத்திருநாள் கொண்டாடினார்கள். ஈகைத்திருநாளை முன்னிட்டு அறுக்கப்படும் கால்நடைகளை…

தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் நீர்தெளிப்பான் பாசனத்திற்கு உழவர்கள் மாறிவருகிறார்கள்.   தேனிப் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வரும் உழவர்கள் பெரும்பாலும் சோளம்,கம்பு, மணிலா போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த சில வருடங்களாக உரிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் எல்லாம் வற்றிவிட்டன. அதனால் உழவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபடுவது பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது.   தண்ணீர்த்தட்டுப்பாடும், வேலையாட்கள் தட்டுப்பாடும் உள்ள சூழ்நிலையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உழவர்கள் தங்கள் விளை நிலங்களைத் தரிசு நிலங்களாக மாற்றிவிட்டனர்….

தேனிப் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகள்-பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் கடந்த சில நாளாகப் பெய்த மழையின் காரணமாகச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.    இருவழிச்சாலை அமைக்கும் பணியும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை சாலைவேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர் அப்பணி நிறுத்தப்பட்டது. அப்போது இருந்தே தேவதானப்பட்டிச் சாலைகள் பழுதடைந்தன.  இருவழிச்சாலை அமைக்கப்படும்போது அச்சாலை செப்பனிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. தற்பொழுது அந்தப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் வரை செல்லும் சாலையும், தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளன….

அயல் மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் கோயில் விழாக்களில் கொண்டாடப்படுவதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டுக் கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், பச்சை குத்தும் கலை போன்றவை இன்றும் நடத்தப்படுகின்றன….

தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு

தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.) சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள்,…