தமிழ் ஆரியத்திற்கும் தாயே! – பேரா.சி.இலக்குவனார்

இந்திய மொழிகளின் தாயாம் தமிழ் ஆரியத்திற்கும் தாயே!             இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார்…

என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வியப்பிறந்தது – பேரா.சி.இலக்குவனார்

  என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது. ” முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின்                  இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே ” என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது. பேரா.சி.இலக்குவனார்:…

ஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது! – சி.இலக்குவனார்

    ஐந்திணைகளாக உலகத்தைப் பிரித்தனர். ஐந்திணைகளே இலக்கியத்திற்குரியனவா யிருந்தன. இவை முதல், கரு, உரி என முப்பெரும் பிரிவை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் முதல், கரு, உரி என்பன தனித்தனியே வரையறுக்கப்பட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133

பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்! – சி.இலக்குவனார்

  எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழி நூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் தோன்றுதல்வேண்டும். அவ்வாறு தோன்றும் உரையும் பாட்டுமே இலக்கியம் எனப்பட்டன. பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும். ஒரு மொழிக்கு வளமும், வாழ்வும் அளிப்பது இலக்கியமே. இலக்கியம் தோன்றப்…

பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்

  கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன….

காதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இலக்குவனார்

       காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 129-130

தமிழ்ப்பண்பாடே உலக நாகரிக ஊற்று – சி. இலக்குவனார்

       தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே ‘ தமிழ் என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உளர். ஆரியர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத்தினால் நன்கு அறியலாகும். அப் பண்பாடும் நாகரிகமும் இக் காலத்திலும் போற்றிக்கொள்ளக் கூடியனவாய் உள்ளன. அங்ஙனமிருந்தும் உலகப் பண்பாடு, உலக நாகரிகம், உலக வரலாறு என்று கூறப்படும் நூல்களில் தமிழகத்தைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் காண இயலாது. கிரேக்கநாட்டுப் பெரியவர்களைப்…

தொல்காப்பியர் தலைசிறந்த மொழிநூல் புலவர் – சி. இலக்குவனார்

   சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப்படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக்குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக்குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும் ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள்ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவராகவும் விளங்குகின்றார்.    மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி; அக்கருவி வழக்காற்றினுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும்…

வரலாறு எழுதுவோர் தெல்காப்பியம் கற்க வேண்டும் – சி. இலக்குவனார்

       வரலாற்று நூலாசிரியர்களில் பெரும்பான்மைபினர் தொல்காப்பியத்தைக் கற்றறியும் பேறு பெற்றிலர். ஆகவே தமிழர்களைப் பற்றித் தவறான செய்திகளை எழுதி விட்டனர். தமிழக வரலாறு எழுதுவோர் தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 127

தொல்காப்பியம் வரலாற்றுக் கருவூலமாகும் – சி.இலக்குவனார்

எகிப்தியரும், கிரேக்கரும், சீனரும், தொன்மை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழரும் மிகமிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமும், பண்பாடும் உடையவர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாகும். ஆனால் இத் தொல்காப்பியத்தை உலகம் இன்னும் நன்கு அறிந்திலது. தமிழர்களே அறிந்திலர். தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கிய விளக்கம் தரும் இன்ப நூலாக மட்டுமின்றி வரலாற்றுக் கருவூலமாகவும் அமைந்துள்ளது. செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 126

” வாழ்வு இன்பத்திற்குரியது” என்று தமிழ்ப் பெரியார்கள் நிலைநாட்டினர்.- சி. இலக்குவனார்

  வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஒரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்பமயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பொரியார்கள், ” உலகம் துன்ப மயம் ; துன்ப வழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள்” என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, “வாழ்வு இன்பத்திற்குரியது; இன்பமாகவாழ்தலே வாழ்வின் குறிக்கோள்” என்று நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற…

இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’யின் சிறப்புகள்

  தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துகளில் சில: ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44). இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துகளின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45). மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துகளின் பிறப்புபற்றிக் கூறும் கருத்துகள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65). தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்(science of Literature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக….