தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1.

(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே! குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை…

தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை தொடர்ச்சி) இனிய அன்பர்களே! வைக்கோல் போரில் மாடு படுத்துக் கிடக்க நியாயமுண்டு. ஆர்.எசு.எசு. ஆளுநர் ஆர்.என். இரவி படுத்துக் கிடக்க நியாயமே இல்லை. வைக்கோல் போரில் படுத்துக் கிடக்கவே நியாயமில்லை என்றால், சட்டப் பேரவை இயற்றும் சட்டமுன்வடிவுகளைக் கீழே போட்டு ஏறிப் படுத்துக் கிடக்க ஏது நியாயம்? இரவியின் அடாவடித்தனத்தால் முடங்கிக் கிடக்கும் முன்முயற்சிகளில் ஒன்று சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்னெடுப்பாகும். இது குறித்து சித்த மருத்துவப் பேரியக்கம் விடுத்துள்ள…

தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை

(தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்! தொடர்ச்சி) மௌனத்தின் சொல்வன்மை 1886 மேத் திங்கள் 4ஆம் நாள் சிக்காகோவின் ஏயங்காடி (Haymarket)யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 31 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 8 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் சாமுவேல், பெல்டன், சவாசு ஆகியோருக்கு ஆளுநர் மன்னிப்பு வழங்கினார். உலூயிலிங்கு தூக்குதண்டனைக்கு முதல்நாள் சிறைச் சாலையில் அழிகுண்டு (Dynamite) வெடித்து இறந்தார். ஆல்பருட்டு பார்சன்சு, ஆல்காட்டு பைசு(Spies), ஃபிசர், எங்கெல் ஆகிய மற்ற நால்வரும் 1887  நவம்பர் மாதம் 11ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். சிக்காகோவின் குக் கவுண்டி நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் இடையில் உள்ள தியர்பார்சன் தெருவின் நடைபாதையில் தூக்குமேடை அமைக்கப்பட்டது. மறுநாள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை. முதல்நாள் இரவு தூக்கம் வருமா? அவர்கள் நன்கு உறங்கினார்கள். காரணம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இன்று அதிகாலை 4.30 –  கைப்பேசி ஒலித்தது. இது நண்பர் சம்ராசின் அழைப்பு. 1974 மே முதல் நாள் இந்த அதிகாலை நேரம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அனைவரையும் எழுப்பி விட்டு போராட்டத்துக்கு அணியமானதை நினைவு கொள்ளும் அழைப்பு. தலைவர் ஏசிகே, தோழர் இலெனின், பாலகிருட்டிணன் எல்லாரும் போய் விட்டார்கள். அந்த ஆண்டே பாலகிருட்டிணன் தூக்க்கிலிடப்பட்டார். இடைப்பட்ட ஆண்டுகளில் இலெனின் மறைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஏசிகே போய் விட்டார். சென்ற ஆண்டு…

தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை

(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்” தொடர்ச்சி) திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை அன்பர் சிபி கேட்கிறார்… திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?  தாழி விடை: “திராவிடம் என்றால் என்ன?” என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன். ’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது,…

தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்”

(தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 – தொடர்ச்சி) அன்பர் தமிழ்க்கதிர் கேட்கிறார்… இன்றைய தாழி (172) மடலில் பொதுமை, குமுகியம், குடியாட்சியம், தேசியம் என்ற தலைப்பில் தாங்கள் வரைந்த கட்டுரையில் – மக்கார்த்தியம் போன்ற பொதுமை வெறுப்புக் கொள்கைகள் எப்படிக் குடியாட்சியத்தை ஒடுக்க முயன்றன என்பது ஒரு வரலாற்றுப் பாடம் என்றுள்ளீர்கள். “மக்கார்த்தியம்” என்றால் என்ன தோழர்? தாழி விடை: சோசப்பு மக்கார்த்தி என்றோர் அமெரிக்கப் பேரவையினர் (செனட்டர்)  1950 பிப்பிரவரியில் குண்டு போடுவது போல் ஒரு செய்தி வெளியிட்டார், அமெரிக்க அயலுறவுத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 1 தொடர்ச்சி) காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 தமிழ்ப் பிரசார சபாவுக்கு இந்திய அரசு ஒதுக்கும் சொற்ப நிதியும் தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் இந்துத்துவப் பரப்புரைக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும். தமிழறிஞர்கள் என்ற போர்வையில் ஆர்எசுஎசு ஆட்கள்தாம் இந்த சபாக்களை மேலாண்மை செய்வார்கள். உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிதான் நோக்கம் என்றால் பிரசார சபா என்ற இந்திப் பெயர் எதற்கு?…

தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும் மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

(தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி தொடர்ச்சி) காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும் மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1   இனிய அன்பர்களே! வாயால் வடை சுடுவதில் வல்லவரான இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி புதிதாக ஒரு வடை சுட்டிருக்கிறார். அதுதான் ‘தமிழ்ப் பிரசார சபா’. இந்தி மொழியைப் பரப்ப 1918ஆம் ஆண்டு காந்தியார் தென்னிந்திய இந்திப் பிரசார சபை (தட்சிண் பாரத் இந்தி பிரசார சபா) அமைத்தது போல் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி நாடெங்கும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி

(தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இந்த மடலின் முதல் தலைப்பில் காணப்படும் கலைச் சொற்கள் பலருக்கும் புதியனவாய் இருக்கக் கூடும். அவற்றை விளங்கச் செய்யும் நோக்கில் “சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி” என்ற தலைப்பில் ஏர் 2018 நவம்பர் 7 (புரட்சி நாள்) இதழில் இடம்பெற்ற என் கட்டுரையை இப்போதைய தேவை கருதி உங்களுடன் பகிர்கிறேன்.  சொல்லடிப்போம் வாங்க!    சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி சோசலிசப் புரட்சியைக் குமுகியப் புரட்சி என்று எழுதியிருந்தேன்.  ஓரிரு ஆண்டுகளாகவே இந்தத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தி…

தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!

(தோழர் தியாகு எழுதுகிறார்  151: சித்திரம் அல்லேன் தொடர்ச்சி) சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! இனிய அன்பர்களே! பன்னாட்டுப் பெருமுதலின் விருப்பத்துக்கேற்ப வேலைநேரத்தை நீக்குப்போக்காக மாற்றியமைக்கும் முடிவு பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோருகின்றோம். இந்தச் சறுக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை மீளாய்வு செய்யவும் அடியோடு களையவும் வேண்டும். திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த திமுக ஆட்சியும் சரி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த…

தோழர் தியாகு எழுதுகிறார்  151: சித்திரம் அல்லேன்

(தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும் தொடர்ச்சி) சித்திரம் அல்லேன் இனிய அன்பர்களே! எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் போல் எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டார்கள். பள்ளி செல்வதற்கு முன்பே அப்பாதான் ஆசிரியர். வீடுதான் முதல் பள்ளிக்கூடம். மிகவும் சிறு வயதிலேயே கற்கை தொடங்கி விட்டது. திருவாரூரில் வீட்டருகே இருந்த ‘பாத்திமா கான்வெண்டில்’ சேர்த்த போது எடுத்தவுடனே இரண்டாம் வகுப்பு. பிறகு இரட்டை வகுப்பேற்றம் (double promotion) கொடுத்து நான்காம் வகுப்பில் போட்டார்கள். மடப்பள்ளியில்(கான்வெண்டில்) ஆசிரியர்கள் நிருவாகிகள் பெரும்பாலும் கிறித்துவ அருட்சகோதரிகள்தாம். அப்போது…

தோழர் தியாகு எழுதுகிறார்  150 : கீழடியும் தென்முடியனூரும்

(தோழர் தியாகு எழுதுகிறார்  149 : அஞ்சலட்டை தொடர்ச்சி) கீழடியும் தென்முடியனூரும் மதுரையிலிருந்து  12 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தென்கிழக்கே சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் இரண்டு காணி(ஏக்கர்) பரப்பளவில் 18.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. தாலின் திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்த பின்னர் சாதி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அகழ் வைப்பகம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை…