தோழர் தியாகு எழுதுகிறார்  149 : அஞ்சலட்டை

(தோழர் தியாகு எழுதுகிறார்  148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!- தொடர்ச்சி) அஞ்சலட்டை இனிய அன்பர்களே! ‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூல் வடிவம் பெற்ற போது “அறிவுப் பாலம்” என்ற தலைப்பில் அதற்கோர் அறிமுகவுரை எழுதினேன். அதன் முதல் பத்தி இதுதான்: “செத்தும் கொடுத்தவர் சீவலப்பேரியார். சௌபாவின் பாண்டி குறித்து நான் விடுத்த மடலை வெளியிட்ட சூனியர் விகடனார் அத்தோடு விடாமல் என்னைத் தேடிப் பிடித்து, சிறை அனுபவத் தொடர் எழுதச் சொன்னார். ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தீட்டத் திட்டிவாசல் திறந்தது இப்படித்தான்.” இந்தச் சுருக்கத்தைக் கொஞ்சம்…

தோழர் தியாகு எழுதுகிறார்  148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!

(தோழர்தியாகுஎழுதுகிறார்  147 : வேண்டும்உரோகித்துசட்டம் –  தொடர்ச்சி) சுசி, கவெ: அரசியல் உயிர்! இனிய அன்பர்களே! அண்மையில் நடந்த என் தொடர்பான ஒரு நிகழ்ச்சி பற்றித் தாழியில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத வேண்டா என்றுதான் இருந்து விட்டேன். ஆனால் எழுத வேண்டும் என்று அன்பர்கள் சிலர் எனக்கு உணர்த்தியுள்ளனர். நான் எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்” குறித்து நற்றுணை நண்பர்கள் காளிபிரசாத்து முதலானோர் கவிக்கோ மன்றத்தில் சென்ற பிப்பிரவரி 25 மாலை ஒழுங்கு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ததோடு இந்த நூல்கள் குறித்தும்…

தோழர் தியாகு எழுதுகிறார்  147 : வேண்டும் உரோகித்து சட்டம்

(தோழர் தியாகு எழுதுகிறார்  146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை தொடர்ச்சி) வேண்டும் உரோகித்து சட்டம்! இனிய அன்பர்களே! தொடர்ந்து உரோகித்து வேமுலா குறித்து எழுதிக் கொண்டிருந்தேன். மீயுயர் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான ‘உரோகித்து வேமுலா (VEMUOLA) சட்டம்’ இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுப்பப்பட்டது . நான்கைந்து ஆண்டு முன்பு புதுவை பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது உரோகித்து வேமுலா குறித்துப் பேசியதோடு உரோகித்து வேமுலா சட்டத்தின்…

தோழர் தியாகு எழுதுகிறார்  146:  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

 (தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது. “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும்…

தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு

(தோழர் தியாகு எழுதுகிறார்  144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி) வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும். திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத்…

தோழர் தியாகு எழுதுகிறார்  144 : சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா

(தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் – தொடர்ச்சி)  சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்த உரோகித்து சக்கரவர்த்தி வேமுலா  2016 சனவரி 17ஆம் நாள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டிற்று. மீயுயர் கல்வி நிறுவனங்களில் ஒடுங்கியர்(தலித்து)களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக் கொணருவதற்கு அது தூண்டுதலாக அமைந்தது. 257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட  யாகூபு மேமனுக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த உரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி…

தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம் தொடர்ச்சி) உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் 2016 சனவரி 17 – ஐதரபாத்து பல்கலைக் கழகத்தின் விடுதி அறை ஒன்றில் அறிவியலரும் செயல்வீரரும் அம்பேத்துகர் மாணவர் சங்கத் தலைவருமான உரோகித் வேமுலா பிணமாகக் கிடந்தார்! ஆம், அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். முந்தைய நாள் சில மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஆட்சியாளர்கள் தொடுத்த பொய் வழக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை வளாகத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். உணவு மறுப்புப் போராட்டக் கொட்டகையிலிருந்து வெளியே சென்ற உரோகித் விடுதி…

தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழ்நாடு இனி தொடர் அரசியல் வகுப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறவரா நீங்கள்? அண்மையில் இந்த வகுப்பில் தமிழ்நாட்டில் அச்சுப் பணியின் முன்னோடிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வகையில் திரு சி.வை.தாமோதரம் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டேன். தொடர்ந்து நம் இணைய வகுப்பில் கலந்து கொள்கிறவரான அபுதாபியைச் சேர்ந்த முதுநிலைப் பொறியாளர் சிங்கை கவிதா சோலையப்பன் தாழி அன்பரும் ஆவார். அவர் திரு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை…

தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல் தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சென்ற ஆண்டு நான் பொள்ளாச்சியில் இருந்த போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. வளர்ந்து வந்து கொண்டிருந்த இளந்தோழர் ஒருவரைச் சாலை விபத்தில் இழந்தோம். சந்தோசு என்ற இயற்பெயர் கொண்ட தோழர் மகிழவனின் அந்தக் கொடிய இழப்பின் நினைவை அவருக்கு நெருங்கிய நண்பரான தோழர் ப. ஆறுச்சாமி பகிர்கிறார்… மகிழவன் நினைவுகள்! கனவுகள்! – ப. ஆறுச்சாமி 22.02.2022 அன்று “நடக்கக் கூடாதது நடந்து விட்டது !”. தந்தை பெரியாரின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி தாெடர்ச்சி) இனிய அன்பர்களே! ·         ஒடுக்கப்பட்ட மாணவர்களை இழிவுபடுத்தித் தற்கொலைக்குத் தள்ளி விடுதல்;         பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடதுசாரி, அம்பேத்துகர்வழி, பெரியார்வழி, சிறுபான்மை நலன், தேசிய இன நலன் சார்ந்த மாணவர் இயக்கங்கள் மீது இழிவும் வன்முறையும்  ஏவுதல்;         தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி வழி இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தூண்டுதல்;         மாணவர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்தல், கெடுத்தல்;         வெறுப்புக் கூச்சல், வெறுப்புரைகள் வழியாகப் பலகலைக்கழக அறிவுச் சூழலையும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ! தாெடர்ச்சி)   தருசன் சோலங்கி! மீண்டும் ஒரு (உ)ரோகித் வெமுலா! உயர்கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிக்கு மீண்டும் ஓர் உயிர்ப் பலி! அகமதாபாத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட மாணவன். பெயர் தருசன் சோலங்கி. வயது பதினெட்டு.  தந்தை குழாய் வேலை பார்ப்பவர்; தாய் வீட்டு வேலை செய்பவர். அரிதின் உழைத்து மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி) இல் இ.தொ. (பி.டெக்) வகுப்பில் இடம் பிடித்து விட்டார். படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் கழிந்திருந்த நிலையில் கடந்த பிப்பிரவரி 12 ஞாயிறு மதியம் விடுதிக் கட்டடத்தின் ஏழாவது…

தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ!

(தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் தாெடர்ச்சி) செந்தமிழ்க்கோ!  இனிய அன்பர்களே! இனவழிப்புத் துயரத்தில் அமிழ்ந்த ஈழ மண்ணிற்கு மிக நெருக்கமான ஒரு தமிழ்நாட்டுப் புள்ளியில்…  கோடியக்கரைக் கடலில் உப்புநீரில் கால் நனைத்துப் பின் கரையேறிக் கதிரொளி முதுகுதொட ஊக்கத்துடன் நெடுநடைப் பயணத்தைத் தொடங்கிய போது எங்கள் அணியில் முதல் வீரரராக இயக்கக் கொடியேந்தி நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ. யார் இந்தத் தாடிக்காரர்? எனக்கு அதுதான் அவரோடு முதல் அறிமுகமே. எங்கள் அணியில் அவர்தான்…