தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும் – பேராசிரியர் இராசன் குறை

(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆறு முதல் கடல் வரை பாலத்தீனத்துக்கு விடுதலை – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மதத்துக்கு ஒரு தேசம் என்ற பிற்போக்கான கொள்கையின் அடிப்படையில் பாலத்தீன மண்ணில் திணிக்கப்பட்ட (இ)யூத தேசம்! இதுதான் இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு அடிப்படைக் காரணம்! தேசத்துக்கு மதத்தை அடிப்படையாகக் கொள்வது இன்றைய உலகில் படுபிற்போக்கானது! தேசம் எதுவானாலும் சரி! மதம் எதுவானாலும் சரி! இந்தியாவை ‘இந்து இராட்டிரம்’ ஆக்கத் துடிப்பவர்கள் குறித்து நமக்கு இசுரேல் ஓர் எச்சரிக்கை! இசுரேலின் புராணப் பின்னணியை விளக்கியும், இந்தியாவில் சாவர்க்கரின்…

தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!

(தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! எங்கள் பெயரால் செய்யாதே! எங்கள் பெயரால் செய்யாதே!(NOT IN OUR NAME! NOT IN OUR NAME!) ஐயா நக்கீரன் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்: “இசுரேல் என்ற நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1948 இல் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்.” 1948ஆம்…

தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்

(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். தலைநகர் சென்னையைப் புரட்டிப் போட்ட புயல் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் எழுதுகிறேன். ததேவிஇ அமைப்புச் செயலாளர், நம் அனைவருக்கும் அன்புத் தோழர் மகிழன் விடுத்துள்ள வேண்டுகோளை உங்களோடு பகிர்கிறேன். நம் தோழமையின் இடுக்கண் களைக ! – தோழர் தியாகு விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பின் துயர்துடைக்கக் கைகொடுங்கள்! அன்பிற்கினியோரே, வணக்கம் ! நான் மகிழன். தென்சென்னையிலிருந்து…

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2

(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2 – தொடர்ச்சி) ஏன் இந்தப் புத்தகம்? 2/2 1950இல் ஆரம்பித்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 1990இல் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் வி.பி. சிங்கின் அரசு மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% பி.பி.வ.(OBC) இடஒதுக்கீடு வழங்கிய போது, அதனை எதிர்த்த உயர் சாதியினரின் போராட்டம் நாட்டை உலுக்கியது. நூற்றுக்கணக்கானோர் தம்மை நெருப்புக்குப் பலிகொடுத்து, பி.பி.வ.(OBC) மக்களின் இடஒதுக்கீட்டிற்குத் தடை போட முயன்றனர். அதைத் தமது மேலாதிக்கத்திற்கு…

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பொ.ந.பி. (EWS) இட ஒதுக்கீட்டுச் சிக்கல் குறித்து முன்பே எழுதியும் பேசியும் உள்ளேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதியர் இரவீந்திர பட்டு வழங்கிய தீர்ப்பு -சிறுபான்மைத் தீர்ப்புதான் என்றாலும் மிகச் சிறப்பான ஒன்று. இந்தத் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து அதன் சில முகன்மைப் பகுதிகளை தாழி மடலில் (தாழி 37, 38) வெளியிடவும் செய்தேன். இரவீந்திர பட்டு தீர்ப்பின் தமிழாக்கமும் இச்சிக்கல்…

தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி

(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2) – தொடர்ச்சி) பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்! தமிழ்நாட்டுக்கு உரிய காவிரியைத் திறந்து விட வேண்டுமெனக் காவேரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்ச நீதிமன்றம் கூறுகின்றன. எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் அறத்துக்கும் கட்டுப்பட மறுக்கிறது கருனாடகம். கேட்டால், எங்களிடமே தண்ணீர் இல்லை என்கிறது.உண்மை நிலவரம் என்ன? கிருட்டிணராவ சாகர் அணைமுழுக் கொள்ளளவு 124.8 அடி உயரம்இன்றைய கொள்ளளவு 90 அடிகபினி அணைமுழுக் கொள்ளளவு 65 அடி உயரம்இன்றைய கொள்ளளவு 57…

தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4-தொடர்ச்சி) ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு – குருநாதன் சிவராமன் சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி அவர்கள் பற்றவைத்த நெருப்பு சனாதனிகளைச் சுட்டெரிக்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். “சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். சிறந்த உதாரணம் ஐயா வைகுண்டர் அவர்கள். அவர் மனிதனாக பிறந்தார். ஆனால் கடவுளாக வணங்குகின்றோம்” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்தப் பேச்சு வழக்கம்போல அவரின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது. ஐயா வைகுண்டரைக்…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் 4/4 இந்திய நாட்டின் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்த வரையில் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஓலைச் சுவடிகளால் வாழ முடியாது என்பதையும், 300 ஆண்டுகளுக்குள் இவை படி எடுக்கப்படவில்லையென்றால் அடியோடு அழிந்து விடும் என்பதையும், இவ்வாறே எங்கள் தமிழ்ச் சமுதாயம் அச்சு இயந்திரம் வருவதற்கு முன்னரே ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை இழந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டேன். அச்சு இயந்திரம் வந்த பின்பும் 53,000 ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார்…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் 3/4 உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் சேகரித்தது. 1993இல் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 53,000 தமிழ் ஓலைச் சுவடிகள் உலகமெங்கும் உள்ள தனிநபர்கள், மற்றும் அமைப்புகள், நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது. மேலும் இந்த 53,000 தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 30,000க்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகள் மருத்துவம் போன்ற பழைய தொன்மையான அறிவியல்…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்-தெ்ாடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் 2/4 பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கிச் சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு.. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச்…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்

(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்) உதிரும் தமிழ் மலர்கள் 2/4பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு.. ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு…