வள்ளுவர் சொல்லமுதம் 14 : அ. க. நவநீத கிருட்டிணன் : நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை
(வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை. நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார். ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த நன்றி ஒன்றனை நினைந்தபோது, அவன் கொன்றாலன்ன இன்னலைப் பின்னொருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி நடுவுநிலைமையினின்று…
வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்
(வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அறிவும் ஒமுக்கமும் கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். “கல்வியின் பயன் அறிவு” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் நிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளை அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு…
வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி
(வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றும் கொல்லோ உலகு” என்பது…
தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி
(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2) – தொடர்ச்சி) பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்! தமிழ்நாட்டுக்கு உரிய காவிரியைத் திறந்து விட வேண்டுமெனக் காவேரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்ச நீதிமன்றம் கூறுகின்றன. எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் அறத்துக்கும் கட்டுப்பட மறுக்கிறது கருனாடகம். கேட்டால், எங்களிடமே தண்ணீர் இல்லை என்கிறது.உண்மை நிலவரம் என்ன? கிருட்டிணராவ சாகர் அணைமுழுக் கொள்ளளவு 124.8 அடி உயரம்இன்றைய கொள்ளளவு 90 அடிகபினி அணைமுழுக் கொள்ளளவு 65 அடி உயரம்இன்றைய கொள்ளளவு 57…
தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 1/4
(தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!-தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை!(கீழ்வெண்மணியில் 52 ஆண்டு முன்பு நடந்தது என்ன?) “நேற்று வரை நாங்கள் கொடுத்ததை வாங்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் இன்று எகிறுவது எப்படி?”வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கும் சாணிப் பால் – சவுக்கடிக்கும் செங்கொடிச் சங்கம் முடிவு கட்டிய பின்னர் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஒரு நிலக்கிழாரின் பிதற்றலிலிருந்து எல்லாம் தொடங்கியது. உலகெங்கும் சமூகவியலர்கள் கீழ்வெண்மணிக் கொலைகள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!- தொடர்ச்சி) அன்பர் நலங்கிள்ளி எழுதுகிறார். தாழி 221 கண்டேன். இந்து அறநிலைத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா? என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன். அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தும் கட்டுரை. இது குறித்து என் கருத்தையும் பதிவிட விரும்புகிறேன். மதச் சார்பின்மை என்பது எல்லா மதத்தையும் சமமாக நடத்துவதில்லை, எல்லா மதத்திலிருந்தும் விலகியிருத்தல். அமைச்சர்கள் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, மத விழாக்களில் கலந்து கொள்வது போன்ற செயல்களைத்…
தோழர் தியாகு எழுதுகிறார் 109 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)
(தோழர் தியாகு எழுதுகிறார் 108: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’- ஓர் ஊடுநோக்கு (4) இலவு காத்த கிளியாகத் திமுக அரசு நலங்கிள்ளி எழுதுகிறார் ஆகத், தோழர் பொன்முருகு பொதுத்தேர்வு(நீட்டு) கட்டாயப் பயிற்சி தேவை என்கிறார். தோழர் பொன்முருகு கூறுவது அநியாயம். மருத்துவராக விரும்பும் மாணவர்களுக்குப்பொ.தே.( நீட்டு) பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய ப்பொ.தே.(நீட்டு) பயிற்சி கூடாது என்கிறேன். மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவரைப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது மாணவர்களின் விருப்பத் தேர்வில் தலையிடுவது. இதைத்தான்…
தோழர் தியாகு எழுதுகிறார் 108: இசுலாமியர் தொடர்பான உரையாடல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 107 : ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இசுலாமியர் தொடர்பான உரையாடல் தொடர்கிறது. நலங்கிள்ளி ஓர் ஐயம் தெரிவித்திருந்தார் (தாழி மடல் 69): சங் பரிவார் இசுலாமியர்களை எதிர்க்கிறார்கள், உண்மைதான். ஆனால் அந்த எதிர்ப்பில் ஓர் ஐந்து விழுக்காடு அளவுக்குக் கூட கிறித்துவர்கள் மீது காட்டுவது இல்லையே, ஏன்? மசூதிகளைக் குறிவைக்கும் கடப்பாரைகள் தேவாலயங்களைக் குறி வைப்பதில்லையே, ஏன்? நலங்கிள்ளியின் வினாவுக்கு விடையளிக்க முற்பட்ட நான்“எனக்குத் தோன்றும் காரணங்கள்” என்று 6…
தோழர் தியாகு எழுதுகிறார் 106: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2) பொதுத்தேர்வு(நீட்டு ) விலக்கு: செய்வதறியாத் தவிப்பு நலங்கிள்ளி எழுதுகிறார் “தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது தலைமைக்கு எடுத்துக்காட்ட வேண்டும்” என்று (தாழி மடல் 71இல்) நீங்கள் சொல்வது எனக்கு உள்ளபடியே வேடிக்கையாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில், சமூக வலைதளப் பதிவுகளில் திமுக உயர் மட்டத் தலைவர்களிடமிருந்து சாதாரணத் தொண்டர்கள் வரை ஆங்கிலத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு…
தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு
(தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு – தொடர்ச்சி) நலங்கிள்ளியின் பின்னூட்டம் மெல்ல, இல்லை, விரைந்து தமிழினிச் சாகும்? தமிங்கில விளம்பரம்பற்றி, தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதுவது பற்றி உங்களின் பதிவு கண்டேன். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை. இன்னும் 15 ஆண்டில் நாம் அடிக்கும் துண்டறிக்கைகளையும் இந்தப் பாணியில் அடித்தாக வேணடும். இது நடக்கப் போவது உறுதி. இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பகிரியில்(வாட்சப்பில்) தட்டச்சு செய்து மாறி மாறி உரையாடிக் கொள்வதைப் பாருங்கள். முழுக்க ஒலிபெயர்ப்புதான். அண்மையில் கல்லூரி மாணவர்கள் பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளக் காண்கிறோம். அவர்கள் எழுதி…
தோழர் தியாகு எழுதுகிறார் 59
(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி) தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது: ___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___ “இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 58: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! – நலங்கிள்ளி
(தோழர் தியாகு எழுதுகிறார் 57 தொடர்ச்சி) நலங்கிள்ளி எழுதுகிறார்: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! தோழர் தியாகு “தாழி மடல்” என்னும் இதழை மின்ம அஞ்சல் வழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தி வருகிறார். தியாகு எழுதுவது அனைத்தும் அறிவுச் சுரங்கத்தைச் சளைக்காமல் தேடும் பணியே! அதனைத் “தாழி மடல்” மீண்டும் மெய்ப்பித்துள்ளது. தாழி மடல் வாசகர்கள் தோழர் தியாகுவிடம் அவர் எழுதும் எழுத்துகள் குறித்து வினாத் தொடுக்கலாம். வினாக்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் விடையிறுக்கப்படும். தாழி மடலைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு…