கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்

50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்

சீரமைப்பதற்கு ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச், சென்னை மாநகரம்…

குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.   நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில்…

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி தலைதூக்கும் அவலம்

 கந்துவட்டி தலைதூக்கும் அவலம்   தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி மீண்டும் தலைதூக்குவதால் பல குடும்பங்கள் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன.   தமிழக முதல்வர்அவர்கள் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மீளவேண்டும் என நினைத்து அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி கந்துவட்டி, கடப்பாரை வட்டி, அலகு(மீட்டர்)வட்டி,   ஓட்ட(இரன்)வட்டி எனப் பலகோரமுகங்கள் செயல் இழந்தன. அதன்பின்னர் மீண்டும் கந்துவட்டி ஆசாமிகள் தங்கள் கோரமுகத்தைக் காட்டி 100க்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வட்டி வாங்கி வட்டிக்கு வாங்கியவர்களின் வீடு, நிலம் போன்றவற்றைப்பறிக்கின்றனர்.   சில கந்துவட்டி…

நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரு விழா

 ஆவணி 03, 2046 / ஆகத்து 28, 2015  ஒன்பதாம் ஆண்டுத் தொடக்க விழா மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா கண்ணதாசன் பிறந்தநாள் விழா தொல்.திருமாவளவன் மறை. தாயுமானவன்

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 4 – வைகை அனீசு

(சூன் 28, 2015 இதழின் தொடர்ச்சி) 4 உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்   பிரிவு 24: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசால் நிறுவப்பட்ட உளவு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது எனப் பிரிவு 24 கூறுகிறது. இதில், 25 வகையான நிறுவனங்கள் அடங்கும். இருந்தபோதிலும், இந்நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தகவல் கேட்டால் அதனைப் பொதுத் தகவல் அலுவலர் மறுக்கக் கூடாது;   தொடர்பான…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 3

3   நாம் கேட்கும் தகவல்களை முறையாகத் தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்வதற்காக அரசு அதிகார்கள் மூன்றாமவர் பற்றிய தகவலைத் தரமுடியாது என ஒரே வரியில் கூறிவிடுவார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அப்துல் மசீத்து என்பவர் தன்னுடைய குடும்ப அட்டையில் முத்துப்பேட்டையில் வசிக்கும் நபர்களின் பெயரைச் சேர்த்துக் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொருட்களை வாங்கி வருகிறார். அவர் குறிப்பிட்டுள்ள இருநபர்களுக்கு திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டையிலும் குடும்ப அட்டை உள்ளது. இதன் தொடர்பாகக் கேட்கப்பட்ட தகவலுக்கு விடை கூறமால் மூன்றாமவர் தொடர்புடைய பதில் கூறஇயலாது என…

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்குக!

    திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!   நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிப்பகுதி, பனங்குடி ஊராட்சி, வாழ்மங்கலம் முதலான பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கவேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழ்நிலை பாதுகாப்பு -மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.  …

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2

(தொடர் கட்டுரை) 2     1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் இசுலாமியர்களின் மசூதி மற்றும் நிருவாகத்தை இசுலாமியர்களிடம் ஒப்படைத்தது. எந்தக் குறிப்பிட்ட சாதியினரிடமோ, துணைச்சாதியினரிடமோ, சாதிக்கு வெளியே இருந்தவர்களிடமோ ஒப்படைக்கவில்லை; எந்தக் குறிப்பிட்ட பிரிவினரிடமும் ஒப்படைக்கவில்லை.  மசூதிகள் இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் அவர்கள் தங்கள் இசுலாமியச் சமயச்சட்டத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். இறைவனுக்காக ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் ‘வக்பு’ எனப்பட்டது. அதன்பின்னர் வக்பு வாரியமாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் ‘தமிழ்நாடு வக்பு வாரியம்’ என அமைக்கப்பட்டு அதன் தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு வக்பு செய்யப்பட்ட சொத்துக்களைப்…

நாகப்பட்டினத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு! தனிமனிதனுக்குப் பாதுகாப்பற்ற நிலை   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையின் போதிய நடவடிக்கையின்மையால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தனிமனிதனுக்குப் பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யத்தில் பணிபுரிந்த பெண்நீதிபதி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதனால் வாரத்தில் இரண்டு நாள் நாகப்பட்டினத்திற்கும், மற்ற நாட்களில் வேதாரண்யத்திலும் பணியாற்றினார். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும்போது   வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் சார்பில் வெடிகுண்டை பெண்நீதிபதி மீது ஒரு மருமக்கும்பல்…

திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!

திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!   நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி சுற்றுலா…

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்   நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகம் உள்ளது.   இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், தங்கள் குறைகளை அரசு களையும் என்ற நம்பிக்கையில் பதிவு அஞ்சலில் தங்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அனுப்பச் செல்கின்ற பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம், “இங்கு பதிவஞ்சல் அனுப்ப முடியாது. தலைமை அஞ்சலகம் அல்லது மற்ற அஞ்சலகங்களுக்குச் சென்று அனுப்புங்கள்” எனக்கூறுவதும், பொதுமக்களை ஒருமையில் பேசுவதும்   அஞ்சலகப் பணியாளர்களின்…