மெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண வேண்டியனவும்

தமிழரால் வாழும்   கலைஞர்களே! பிற துறையினரே! தமிழர்க்காகவும் வாழுங்கள்!      மெல்லிசை மன்னர் (ஆங்கில முதல் எழுத்துகளில்) எம்.எசு.வி. (என அழைக்கப்பெறும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்) அல்லது ம.சு.விசுவநாதன் ஆனி, 2046, சூலை 14, 2015 அன்று இசைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தன் இசையால் பன்னூறாயிர மக்களைக் கட்டிப்போட்டவரைக் காலன் கட்டிப்போட்டுவிட்டான்.   ஆனி 11, 1959 / சூன் 24, 1928 அன்று கேரளாவில் பாலக்காட்டு அருகில் உள்ள எலப்புள்ளி என்னும் ஊரில் சுப்பிரமணியன் – நாராயணக்குட்டியம்மாள் (நானிக்குட்டி) ஆகியோரின் மகனாகப்…

மே 17 நினைவேந்தல், சென்னை

    தமிழீழத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையைக் கோரியது ஒன்றே. சிங்களப் பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியாவும்  மேற்கத்திய நாடுகளுமே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும்  மண்டல மேலாதிக்கத்திற்காகவும் நமது இனத்தைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

அனைவருக்கும், வணக்கம் ! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம். நாள்: வைகாசி 03, 2046 /  05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை  நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்) [இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165] – தரவு :  நாஞ்சில் பீட்டர்

உலகத்தமிழ்க்கழகம் சார்பில் இளவரசு நினைவேந்தல்

    தமிழியக்கத் தலைவர் பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் தி.பி.2016 கும்பம் 15 வெள்ளிkகிழமை (27-01-2015) மாலை 6.15 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.   உலகத்தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் ந.அரணமுறுவல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சென்னை யாழ் நூலகம் வைகறைவாணன் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ நெடுமாறன் மறைந்த இளவரசின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். இக்காலம், தமிழகத்தில் நிலவும் தமிழ் மொழி, தமிழின அவல நிலைகளை…

பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல்

பேராசிரியர் இரா.இளவரசு  அவர்களின்  நினைவேந்தல் நிகழ்ச்சி தென்மொழி  இயக்கம் சார்பில் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க் களத்தில் தி.பி.2046 கும்பம் 10 ஞாயிறு (22-02-2015)அன்று மாலை 3.00 மணியளவில்  நடைபெற்றது. முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் பேராசிரியர் பொற்கோ மறைந்த இளவரசு அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். பேராசிரியர் அரசேந்திரன், முனைவர் இரா .கு.ஆல்துரை, முனைவர் அரணமுறுவல், திருவினர் கி. குணத்தொகையன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வைகறைவாணன், இரா.செம்மல், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் திருவாட்டியர் இறை.பொற்கொடி, தழல் தேன்மொழி, மரு. அன்பு (பேரா.இளவரசு…