இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்மான வீரம் மானங் காத்தான்மானமே உயிரினும் சிறந்ததென்பது தமிழ்நாட்டார் கொள்கை. “மானங் கெடவரின் வாழாமை முன் இனிதே” என்றார் ஒரு தமிழ்ப் புலவர். எனவே, மானங் காத்த வீரனை மனமாரப் போற்றும் வழக்கம் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் உண்டு. நாட்டின் மானத்தைக் காத்தருளிய வீரன் ஒருவனுக்கு “மானங் காத்தான்” என்ற பட்டம் சூட்டிய நாடு தமிழ் நாடு. அவன் பெயரைத் தாங்கிய ஊர்கள் இன்றும் பாண்டி…

வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்

(வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) குழந்தையைத் தானே சுமந்துபெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.பிறந்த நாடும்சுவர்க்கத்தினு மேலானவை ★ (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 இரட்டிப்பு இலாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில்ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள்திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும்உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டியவத்திரங்களும் நாங்கள் எடுத்துக் கொண்டு போனவை. மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது.“அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனைஎடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர்சொன்னார்….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் பேராசைபகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை“1 என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். பாரதப் போரும் தமிழரசும்மண்ணாசை பிடித்த மன்னர் வாழும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தொகுப்பு : ஏ. கே. செட்டியார்★ (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 தொடர்ச்சி அன்னபூரணி ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டே இராமையருடன்அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்றுஇராமையர் தம் தமக்கையை அழைத்தார். பலசமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விசயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம் – தொடர்ச்சி) தமிழர் வீரம் இசைக்கருவிகள் போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள்.12 அவற்றின் பெயர்கள் ஒலிக் குறிப்பால் அமைந் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை; முர்முர் என்று ஒலிப்பது முருடு; கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும்; போர்…

வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன்

(வள்ளுவர் சொல்லமுதம் 6 : அன்பும் அறமும் : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் ரு. அன்பும் அறமும்.02 “முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்தற்காய் உதிர்தலும் உண்டு”என்பது அம் முனிவர் மொழி. குழந்தை பிறந்த வுடனே இறந்து போதலும் உண்டு. தக்க இளம் பருவத்தில் இறத்தலும் உண்டு. முறையே முதுமை பெருகி மறைதலும் உண்டு. ஆதலின், “யாம் இளை யம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்‘ என்று மக்களே ஏவினர். இவ் அறத்தை ஆற்றும் முறைமையை விளக்கப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை –  தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் மறுமொழி வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாய் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி             ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?’ என்றனள்; 25 கோமகன் மறுமொழி           `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே! துணைசெய நினைந்தே தோகை அவட்குத் துணைவன் ஆகத் துணிந்தேன்’ எனலும்,     மீண்டும் இடித்துரை           `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக்           …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 புலமையும் அன்பும் குருபூசைத் தினத்தன்று இரவு ஆகாரம் ஆனபிறகு அங்கே நடைபெறும் விசேடங்களைப் பார்க்கச் சென்றேன்.சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதசுவரக்காரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிசியர்கள் வீடுகளில் தீபாராதனை…