4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 461-464

(தமிழ்ச்சொல்லாக்கம்: 453-460 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 461-464 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 461. சங்கீத வித்துவான்கள் – இசைப் புலவர்கள் தற்கால வழக்கிலுள்ள சுமார் 40 சாதாரண இராகங்களை இனங்கண்டு பெயர் சொல்லத் தெரிந்தவர். மேலும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள்  மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன  அல்ல;  மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும்.   இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன  என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 9 மருத நிலம்‌ தொடர்ச்சி கேணி, கிணறு     இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள  திருவல்லிக்கேணியும்,நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.  நிலம்     இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள்பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம்  என்ற ஊர்ப் பெயரிற்காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக்குறிப்பதென்பர்.  புலம்    …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 453-460

(தமிழ்ச்சொல்லாக்கம்: 447-452 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 453-460 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 453. பிரதிகம் – பிண்டம் 454. பதிகம் – பத்து மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம் புற்றி டத்தெம் புராண னருளினாற் சொற்ற…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 73

(குறிஞ்சி மலர்  72 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி “தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்” என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள். அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். முருகானந்தம் மீனாட்சிசுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதையோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான். “உட்கார் தம்பி. உன்னிடம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20

(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 447-452

(தமிழ்ச்சொல்லாக்கம்: 437-446 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 447-452 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 447.  Scientific culture – சாத்திரக்கல்வி 448. Fine Arts – நற்கலை மநோபிவிர்த்தியினுக்குப் பிரதான சாதனங்களாயுள்ளன முறைப்பட்ட சாத்திரக்கல்வி (Scientific culture)யும்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 10

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 9 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி) என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று, கனம் கிருட்டிணையர் மனோதைரியமும் பிரபுத்துவமும் உடையவர். என் தந்தையாரை அவர் மிக்க அன்போடு பாதுகாத்து வந்தார். ஆனாலும் அவருக்குப் பல வேலைகளை ஏவுவார். தினந்தோறும் தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வசுத்திரம் துவைத்துப் போடுவார்; வெந்நீர் வைத்துக் கொடுப்பார். அந்த சமசுதான சமீன்தாராகிய கச்சிக் கல்யாணரங்கர், கிருட்டிணையரையும் ஒரு சமீன்தாரைப் போலவே நடத்திவந்தார். அவருக்கு எல்லாவிதமான சௌகரியங்களையும் அமைத்துக் கொடுத்தார். கனம்…

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5  தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5  தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 437-446

(தமிழ்ச்சொல்லாக்கம்: 430-436 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 437-446 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 437. அபிவிருத்தி         –           மேம்பாடு 438. புண்ணியம்         –           நல்வினை 439. பராக்கிரமம்        –           வல்லமை 440. அனுமதி  –           கட்டளை 441….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ்   தொல்காப்பியர் காலம் ஆரியர்கள் தென்னாட்டில் குடியேறிய காலம். அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். அக்கால நிலையைத் தெளிவாக அறிவிப்பது தொல்காப்பியமே. தொல்காப்பியர் அவர்க்கு முன்பிருந்தோர் இயற்றிய நூல்களையும், அவர் காலத்து நூல்களையும் அவர் கால வழக்கினையும் நன்கு ஆராய்ந்து மொழியிலக்கணமும் இலக்கிய இலக்கணமுமாகப் பயன்படத் தம் நூலை ஆக்கித் தந்துள்ளார். அத் தொல்காப்பியத்துள் பயின்றுள்ள பல சொற்கள் இன்றும் தமிழை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்காப்பியச் சொற்களுக்கு உரிய அகராதியை ஒருமுறை…