பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 31 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
( ஆனி 13, 2046 / சூன் 28, 2015 தொடர்ச்சி) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00 http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!
உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே! நடுநிலக் கடலைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களினம் இந்திய தீவக்குறையில் தோன்றியது என்றே தீர்மானிக்கலாம்… இத்தீவக்குறை, தென்னிந்தியாவை ஆப்பிரிக்காவோடு இணைந்திருந்ததும், சிந்துகங்கை ஆறுகளின் பள்ளத்தாக்கு அமையாத காலத்தில் கடலில் மூழ்கியதுமான குமரிக் கண்டத்தில் இருந்ததாகும். இம்மாநிலமே திராவிடரின் மூலத் தாயகமாகும். ….. ….. ….. எனவே, திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படவில்லை; சிறந்த நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்த கிரீக்கு, சுமேரியா, பாபிலோனியா, பாலினீசியா போன்ற நாடுகளிலும் மற்றும் பண்டை உலகின் நாகரீக நாடுகள் பலவற்றிலும்…
தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்
தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர் இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். – பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)
காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு
காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும் இறைமையும். குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும் முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல; கணவனே! வந்தேன்! பூங் : இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) காட்சி – 7அங்கம் : அன்பரசன், கவிஞர் இடம் : குடில் முன்வாசல் நிலைமை : (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப : நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி : வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி – 1 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை : (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் முட்டையிட்டுவிடக் குஞ்சு பொரித்து…
தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு
தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.) சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள்,…
செஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) 7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும் சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச் சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன. 2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு 300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு, 02.02.2014). இது சீன…
பாரதப் பண்பாடு எது? – வை.தட்சிணாமூர்த்தி
சென்ற ஆண்டிலிருந்து இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு என்று ஏதம் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பெரிய இடங்களில் மிகுந்து விட்டது. பிரிவினைத் தடைச் சட்டம் மற்றும் சில வரையறைகள் அதன் விளைவே, பூவியல் அமைப்பை ஒட்டி இந்தியா ஒரு நாடுதானா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நெடுநாட்களுக்கு முன்பே மேலைநாட்டு பூவியல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். சர். சான் சிடார்ச்சி என்னும் ஆங்கிலேயப் பூவியல் ஆராய்ச்சியாளர் போன்றோர் ‘‘இந்தியா பல நாடுகளின் கூட்டேயன்றி ஒரே நாடு அன்று’’ என்பர் வின்சன்ட் சிமித்சிசோம் போன்றோர் இந்தியா…