“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – புதுச்சேரி

  பெருந்தகையீர்! வணக்கம். புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம்   பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கின்றது. தங்கள் பங்கேற்பை விரும்பி அழைக்கின்றோம். அறிவன்புடன் திட்ட ஒருங்கிணைப்பாளர். நன்றி!

புதுச்சேரி: சித்தர் இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கம்

பங்குனி 5.6 & 7, 2047 / மார்ச்சு 18, 19 & 20, 2016 ஆய்வுச்சுருக்கம் அனுப்புகை இறுதி நாள்: தை 27, 2047 / பிப்பிரவரி 10, 2016

அனைத்துலகப் போதிதருமர் மாநாடு – நிகழ்ச்சிப் படங்கள்

ஆசியவியல் நிறுவனம், சென்னை (Institute of Asian Studies, Chennai) சீயோன்   பயிற்றகம், தென் கொரியா (Institute of Seon, South Korea) சாஓலின் கோயில், சீனா (Shaolin Temple, China) உலகப் போதிதருமர் பேரவை, சப்பான் (World Association of Bhodhidarma, Japan) ஞாலப் போதிதருமர் ஒன்றியப் பேரவை, ஆங்காங்கு (United Universe Bodhidharma Association, Hong Kong) புலம் பெயர்ந்த தமிழர்க்கான பன்னாட்டுப் பேரவை, மொரிசீயசு (International Association of Tamil Diaspora, Mauritius) இந்தியக் கலை-பண்பாட்டு உறவு பேரவை, புதுதில்லி…

காலந்தோறும் முருகன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), புதுச்சேரி மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம் தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் முருகன் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் மார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014 காலை 9.30 முதல் மாலை 4.30

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும். இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எத்திராசு மகளிர் கல்லூரியின்…

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம்   பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in குறள்நெறிப் பரப்புரைப்பணி பள்ளிமாணாக்கனாக இருந்த பொழுது உணவு நேரத்தில் அமைதி காப்பதற்காக நாள்தோறும் திருக்குறளைப்படிக்கும் பழக்கத்தை மேற்கொணடிருந்தார் பேராசிரியர் இலக்குவனார். படிக்குந்தோறும்  படிக்குந்தோறும் அதன் இன்பத்தில் மூழ்கினார். குறள்நெறியையே தம் வாழ்வின் நெறியாக அமைத்துக் கொண்டார். தாம் பெற்ற பேறு இவ்வையகம் பெற வேண்டும் என்றல்லவா ஆன்றோர் எண்ணுவர். அதன்படி…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in சொல்லாய்வுப்பணி   சொல்லாய்வின் மூலமாகத் தமிழின் தொன்மை, தூய்மை, காலம் முதலியவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வரையறுக்கிறார்.   தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்/Origin and Growth of Tamil, தமிழ்ச்சொற்கள் பற்றிய சிற்றாய்வு/A Brief study of Tamil words, தமிழிலக்கண உருவாக்கம்/ Making of Tamil Grammar, தமிழ்மொழியில் முதல்நிலைச் சொற்களும்…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி   மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியர் நமக்களித்த தொல்காப்பியம். இன்றைக்கு ஓரளவு தமிழ் படித்தவர்கள் தொல்காப்பியத்தைப்பற்றி அறிந்திருப்பினும் அறிந்திருக்க வேண்டிய அளவிற்கு அறிந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய – இந்திய வரலாற்றாசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய – உலக மொழியறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in படைப்புப்பணி   படைப்புப்பணியில் குறிப்பிடத்தகுந்த சிறப்பை உடைய மொழிபெயர்ப்புப் படைப்புப்பணியும் அடங்கும். பேராசிரியரின் மொழிபெயர்ப்புப் பணி என்பதும் பள்ளிப் பருவத்திலேயே அரும்பி விட்டது. பள்ளி ஆண்டுமலரில் ஆங்கிலச் செய்யுள்களைத் தழுவி, “உலகம் நமதே! உயர்ந்தோர் நாமே!” என இவர் எழுதிய அகவல் வெளிவந்தது. இதுவே, இவரின் மொழிபெயர்ப்பு ஈடுபாடும் கவிதை ஈடுபாடும்…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in   பள்ளிப்பருவத்திலேயே தமிழ்நலப்பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் பேராசிரியச் செம்மல் முனைவர் சி.இலக்குவனார். தம் வாழ்நாளில் இறுதி வரை அத் தமிழ்ப்போராளி தம்முடைய தமிழ்சார் போராட்டப் பாதையில் இருந்து விலகவில்லை. பேச்சும் மூச்சும் தமிழாகக் கொண்டு வாழ்ந்தவர் அச்செந்தமிழ்ச் செம்மல். எண்ணம், எழுத்து, உரை, செயல் யாவும் தமிழ்நலமே எனத் திகழ்ந்தவர்…