தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்? ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம் யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள். இங்கே அவ்வாறு தேர்தல் ஆணையர் யாரும்…
கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே! அ.தி.மு.க. மூன்றாகப் பிளவுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. தீபா மாதவன் இக்கட்சியைச் சாராதவர். அவர் பக்கம் அதிமுக ஆதரவாளர் சிலர் போனாலும், இதைப் பிளவாகக் கூறமுடியாது. இரத்தத் தொடர்பு உறவு என்று மட்டும் ஒருவரை ஆதரிக்கும் முட்டாள்தனம் உள்ள சிலர் சில காலம் அவர் பக்கம் இருக்கலாம். அதனால், கட்சி உடைந்ததாகக் கூறமுடியாது. பா.ச.க. ஆதரவு பன்னீர் செல்வம் பக்கம் சிலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கலைஞர் எதிர்ப்பு என்ற அதிமுக கொள்கையைச் சசிகலா…
சசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க. – இலக்குவனார் திருவள்ளுவன்
சசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க. நாயகன் இல்லா நாவாய் (தலைவன் இல்லாத கப்பல்)போல ஆளுங்கட்சி தடுமாறித் தத்தளித்துக் கொண்டுள்ளது- மேனாள் முதல்வர் செயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்த பொழுதே ஆட்சிச் சக்கரம் சுற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. அவர் மறைந்த பின்னர் ஆளுங்கட்சியின் பிளவால் குளிர் காயலாம் எனச் சிலர் எண்ணினர். ஒற்றைஇலக்க எண்ணிக்கையைத் தாண்டாச் சிலர் தனி அணி கண்டாலும், கட்சியில் பிளவு இல்லை என்றுதான்சொல்ல வேண்டும். இந்தச்சூழலில் எந்தக் கட்சியிலும் ஏற்படும் பிணக்குதான் இது. ஆனால், மேலே உள்ள ஒருவன்,…
தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்! அதிமுக தலைவி நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுதே அடுத்த ஆட்சி தம்முடையதுதான் எனக் கனவு கண்டு தலை கால் புரியாமல் குதித்தன பாசகவின் தலைகள். அவர் மறைந்த பின்னர், உடனடியாகத் தம் கைப்பாவையான ஆட்சியை நிறுவினர். உண்மை புரிந்து ஆளுங்கட்சி விழித்துக்கொண்டு கைப்பாவையை மாற்றினர். அதன்பின்னரும் பாசக, ஆளுங்கட்சியில் பெரும்பிளவு ஏற்படும் எனக் கனவு கண்டு முயற்சியும் மேற்கொண்டு கானல்நீராய்ப் போனது. இருந்தும் ஆசை யாரை விட்டது? அதிகாரம் கையில் இருக்கும் பொழுது இது கூட முடியாவிட்டால் இழுக்கென்று…
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக ஆட்சிகவிழும்; தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார். பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…
ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம். அதுபோல், தமிழ் நாட்டில் பல கட்சிகள் இருப்பினும் இரு கட்சி…
மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருவள்ளுவர், திருக்குறள் 772) தமிழகச் சட்டமன்றங்களில் தொடர்ந்து இரு கட்சிகளின் முதன்மைகளுக்கு மாறாக அவ்வப்பொழுது 3 ஆம் அணி உருவாக்கம்பற்றிய பேச்சும் முயற்சியும் வந்துபோகும். என்றாலும், இந்தமுறை சீர்குலைப்பு முயற்சிகளையும் மீறி மக்கள்நலக்கூட்டணி உருவானது. முன்பு இருந்த சூழலைவிட இம்முறை மக்கள் பெரிதும் மாற்றத்தை விரும்பியது உண்மை. இருப்பினும் மக்களின் நேர்மை உணர்வு அதற்கு எதிராக அமைந்துவிட்டது. முதலில் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு…
யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
யார் வந்தாலும் வரவேற்போம்! வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார் ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்! அஇஅதிமுக வின் மீது மக்கள் காணும் குறைகள் வேறுகட்சி மீது இருந்தது என்றால்,…
ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? – தமிழ்சிவா
ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? கல்வித்துறையைச் சீரழித்தது. மலை, மணல் போன்ற இயற்கை வளங்களைப் பேய்த்தனமாகச் சுரண்டியது. 3.சாராய ஆலைகள் நடத்தி மக்களைச் சாகடித்தும் பெண்களைக் கையறுநிலைக்குத் (அபலைகள்) தள்ளியும் அனைவரையும் அறிவுக் குருடர்களாக்கியும் அட்டூழியம் செய்தது. இலவசங்களால் மக்களைச் செயல்படாமல் செய்த குற்றத்திற்காக மாற்றம் வேண்டும். 5.பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயல்களால் தமிழகத்தையே பாலைவனமாக்கிய குற்றங்களுக்காகத் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்தவித மன்னிப்பும் வழங்கக் கூடாது . மீண்டும் அவர்களிடத்தில் ஆட்சியை வழங்குவதென்பது நமக்கு நாமே விரைவில் உயிர் பறிக்கும் நஞ்சு…
கட்டாயம் காலி – தமிழ்சிவா
கட்டாயம் காலி “காதலில் தோற்றுப் போன உழவோர் சாதலைத் தேர்ந்து சட்டென மாய்ந்தார்” திருவாய் மலர்ந்தருளி தித்திக்கும் தனது கண்டு பிடிப்பை எத்திக்கும் புகழ்மணக்க எடுத்துக் கூறிய எழில்மிகு ஆட்சியில் கல்வி கடைச்சரக்கு உண்மை உண்மை காவிக்கு முதலிடம் முற்றும் உண்மை சிறுமையே பெருமையும் சிறப்பு மாகும் நிலத்தைக் கையகப் படுத்தி நாட்டின் வளத்தைக் கயவர் கையில் கொடுத்து நெஞ்சம் நிறைவு கொள்ளவே நாளும் வித்தைகள் காட்டும் வித்தகர் வாழ்க! உள்ளே குப்பையும் வெளியே தூய்மையும் கொண்ட “கோ”மகன் வாழி! வாழி! கண்டெடுத்த…
தமிழ்ப்புலிகளின் பெண்கேட்கும் போராட்டம்
மாசி 2, 2016 / பிப்.14, 2015, கோயம்புத்தூர்
மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்
மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…